இந்தியா வந்த மாருதி விட்டாரா எஸ்யூவி - ஸ்பை படங்கள்!

Written By:

இந்தியாவில்,மாருதி பிராண்டில் விரைவில் வர இருக்கும் புதிய விட்டாரா எஸ்யூவிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. மாருதி ஆலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த விட்டாரா எஸ்யூவிகளை ரகசியமாக படம் பிடித்து, ஆன்லைனில் வெளியிட்டிருக்கின்றனர்.

டீம் ஃபியட் மோட்டோகிளப் என்ற ஃபியட் கார் பிரியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான பிரத்யேக ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

கான்செப்ட்

கான்செப்ட்

மாருதியின் தாய் நிறுவனமான ஜப்பானை சேர்ந்த சுஸுகியின் புதிய தலைமுறை விட்டாரா மாடலாக உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது விட்டாரா. அத்துடன், சுஸுகி ஐவி-4 கான்செப்ட்டின் அடிப்படையில் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

வருகை ஏன்?

வருகை ஏன்?

வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச வாகன கண்காட்சியில் இந்த புதிய விட்டாரா எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட இருப்பதை மாருதி உறுதி செய்திருக்கிறது. அங்கு பார்வைக்கு வைப்பதற்காகவே, இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

தற்போது வெளிநாடுகளில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கொடுக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், எர்டிகா காரில் பயன்படுத்தப்படும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எஸ் கிராஸ் மாடலில் பயன்படுத்தப்படிருக்கும் சக்திவாய்ந்த 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக களமிறக்கப்பட இருக்கிறது. மேலும், ரூ.10 லட்சத்திற்குள் ஆரம்ப விலை கொண்ட மாடலாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ் க்ராஸ் ஏமாற்றம்

எஸ் க்ராஸ் ஏமாற்றம்

சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட எஸ் க்ராஸ் என்ற புதிய கிராஸ்ஓவர் மாடல் மாருதி நிறுவனம் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. மாதத்திற்கு சராசரியாக 5,000 எஸ் க்ராஸ் எஸ்யூவிகளை விற்பனை செய்ய இலக்கு வைத்திருந்தது மாருதி. ஆனால், அந்த இலக்கை அது அடைவதற்கு திணறி வருவதால், புதிதாக இந்த மாடலையும் துணைக்கு இறக்குகிறது மாருதி.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

வரும் பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாருதி விட்டாரா எஸ்யூவி, தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Images Source

English summary
Maruti Suzuki has imported the Vitara compact SUV to India, hint that it could be launched soon. The Vitara is based on Suzuki's XA Alpha concept, which was displayed at 2012 Auto Expo in Delhi. Later on it was showcased again in pre-production guise as the iV-4 concept at 2014 Paris Motor Show.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark