கூடுதல் வசதிகளுடன் மாருதி ஆல்ட்டோ கே10 காரின் ஸ்பெஷல் எடிசன்

Written By:

கூடுதல் வசதிகளுடன் மாருதி ஆல்ட்டோ கே10 காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி ஆல்ட்டோ கே10 அர்பனோ எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்திருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட் விபரம்

வேரியண்ட் விபரம்

எல்எக்ஸ், எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் ஆகிய அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். தவிர்த்து, சிஎன்ஜி எரிபொருள் மாடலிலும் இந்த லிமிடேட் எடிசன் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கவர்ச்சியை கூட்டுவதாக இருக்கிறது. அத்துடன், பனி விளக்குகள் அறை, டெயில் லைட் க்ளஸ்ட்டர், வீல் ஆர்ச்சுகள், சைடு மிரர்கள் என பல இடங்களில் க்ரோம் பூச்சு பாகங்களால் மிளிர்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

ஆம்பியன்ட் லைட் செட்டிங்க, எல்இடி டோர் சில் பட்டை, லெதர் சீட் கவர்கள், ஸ்டீயரிங் வீல் கவர், பிரத்யேக மிதியடிகள் மற்றும் புதிய பெடல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதர வசதிகள்

இதர வசதிகள்

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், புளுடூத் கிட், யுஎஸ்பி கார் சார்ஜர் மற்றும் டெம்ப்ரேச்சர் டிஸ்ப்ளே ஆகியவையும் கூடுதலாக இருக்கின்றன.

 விலை

விலை

சாதாரண மாடலைவிட இந்த லிமிடேட் எடிசன் பேக்கேஜ் கொண்ட ஆல்ட்டோ கே10 காரின் விலையில் ரூ.16,990 கூடுதலாக செலுத்த வேண்டும்.

 
English summary
Maruti Suzuki has launched Alto K10 Urbano Edition in India.
Story first published: Wednesday, October 7, 2015, 18:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark