மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம்... மிகச் சரியான விலை!!

By Saravana

ரூ.4.99 லட்சம் என்ற மிகச்சரியான ஆரம்ப விலையில் மாருதி பலேனோ ஹேட்ச்பேக் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதியின் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலாக மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் புதிய பலேனோ கார், மாருதியின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது மாடலான மாருதி எஸ் க்ராஸ் காரின் விலையை அதிகமாக நிர்ணயித்து சூடுபட்டுக் கொண்ட மாருதி, தற்போது பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் காரை மிகச் சரியான விலையில் கொண்டு வந்துள்ளது. எஞ்சின், வசதிகள், விலை, மைலேஜ் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்

வடிவம்

மாருதி பலேனோ கார் 3,995மிமீ நீளமும், 1,745மிமீ அகலமும், 1,500மிமீ உயரமும் கொண்டது. 2,520 மிமீ வீல்பேஸ் கொண்டது. இந்த கார் 170மிமீ தரை இடைவெளியும், 339 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் உள்ளது.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள் சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா, ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்டுகளிலும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கும். டீசல் மாடல் சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா என்ற நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

எல்இடி பகல்நேர விளக்குகள், அலாய் வீல்கள் உள்ளன. முற்றிலும் கருப்பு நிற இன்டிரியர் ஃபினிஷிங் செய்யப்பட்டு இருக்கிறது. நேவிகேஷன் சிஸ்டம், வாய்மொழி உத்தரவுகள் மூலம் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதி, ஆப்பிள் கார்பிளே வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை முக்கிய அம்சங்களாக குறிப்பிடலாம்.

 எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

மாருதி ஸ்விஃப்ட் காரில் இருக்கும் அதே எஞ்சின்கள்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1,197சிசி எஞ்சின் 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலில் இருக்கும் 1,248சிசி மல்டிஜெட் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

புதிய மாருதி பலேனோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.39 கிமீ மைலேஜையும் வழங்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சிவப்பு, நீலம், ஆரஞ்ச், வெளளை மற்றும் சாம்பல் ஆகிய ஐந்து வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் எலக்ட்ரானிக் ப்ரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் நுட்பம் கொண்ட ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டியூவல் ஏர்பேக்ஸ் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் மாடல்கள் விலை விபரம்

பெட்ரோல் மாடல்கள் விலை விபரம்

  • சிக்மா - ரூ. 4.99 லட்சம்
  • டெல்ட்டா - ரூ. 5.71 லட்சம்
  • ஸீட்டா -ரூ. 6.31 லட்சம்
  • ஆல்ஃபா - ரூ. 7.01 லட்சம்
  • சிவிடி மாடல் [ஆட்டோமேட்டிக்] - ரூ. 6.76 லட்சம்
  • டீசல் மாடல்கள் விலை விபரம்

    டீசல் மாடல்கள் விலை விபரம்

    சிக்மா - ரூ. 6.16 லட்சம்

    டெல்ட்டா - ரூ. 6.81 லட்சம்

    ஸீட்டா - ரூ. 7.41 லட்சம்

    ஆல்ஃபா- ரூ. 8.11 லட்சம்

    அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

Most Read Articles
English summary
Maruti Suzuki launches the much awaited premium hatchback—the Baleno; prices of this premium hatchback start from Rs. 4.99 lakh ex-showroom (Delhi).
Story first published: Monday, October 26, 2015, 14:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X