டெல்லியில், மாருதியின் நெக்ஸா பிரிமியம் கார் ஷோரூம்கள் திறப்பு!

Written By:

மாருதி கார் நிறுவனத்தின் பிரிமியம் கார் மாடல்களை விற்பனை செய்வதற்கான பிரத்யேக நெக்ஸா கார் ஷோரூம்கள் டெல்லியில் திறக்கப்பட்டிருக்கிறது.

இது பிற கார் ஷோரூம்கள் போல் அல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு மிக உன்னதமான கார் வாங்கும் அனுபவத்தை வழங்கும் என மாருதி தெரிவித்திருக்கிறது.

நெக்ஸா சிறப்புகள்

நெக்ஸா சிறப்புகள்

அனைத்து நெக்ஸா ஷோரூம்களும் பிரத்யேக கட்டட வடிவமைப்பை பெற்றிருக்கும். சுகாதாரமான உட்புறம், மின்னணு திரைகள் மூலமாக கார்களை பற்றிய தகவல்களை பெறும் வசதி, சொகுசான வாடிக்கையாளர் காத்திருப்பு அறை ஆகியவை இந்த ஷோரூம்களின் சிறப்புகளாக இருக்கும்.

விரிவாக்கம்

விரிவாக்கம்

முதல் கட்டமாக 20 முக்கிய நகரங்களில் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்களை மாருதி திறக்க இருக்கிறது. டீலர்களின் முதலீட்டில் இந்த புதிய பிரிமியம் ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளது. அடுத்த 6 முதல் 8 மாதங்களில் 100 நெக்ஸா ஷோரூம்களை நாடு முழுவதும் திறக்க இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.

பிரிமியம் கார் மாடல்கள்

பிரிமியம் கார் மாடல்கள்

அடுத்த மாதம் 5ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள மாருதி எஸ் க்ராஸ் கார்தான் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருக்கும் முதல் மாடல். இதைத்தொடர்ந்து, ஒய்ஆர்ஏ என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் நெக்ஸா வாயிலாக விற்பனைக்கு வர இருக்கிறது. இதுமட்டுமின்றி, நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக பல புதிய பிரிமியம் கார் மாடல்களை விற்பனை செய்யவும் மாருதி திட்டமிட்டிருக்கிறது.

கொசுறுத் தகவல்

கொசுறுத் தகவல்

நெக்ஸா ஷோரூம்கள் திறப்பு பற்றிய தகவல்களை வெளியிட்ட மாருதி நிறுவனத்தின் உயரதிகாரி, விரைவில் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

 
English summary
Maruti Suzuki has launched of its first NEXA car showrooms on Thursday in Delhi.
Story first published: Saturday, July 25, 2015, 12:08 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos