கதவு தாழ்ப்பாளில் பிரச்னை: மாருதி ஆல்ட்டோ கார்களுக்கு ரீகால்!
கதவு தாழ்ப்பாளில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக 33,000 மாருதி ஆல்ட்டோ கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் முதல் கடந்த மாதம் வரை தயாரிக்கப்பட்ட மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ கே10 கார்களின் கதவு தாழ்ப்பாளில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கார்களில் ஆய்வு செய்ய மாருதி முடிவு செய்திருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ந் தேதிக்கு பின்னரும், கடந்த பிப்ரவரி மாதம் 18ந் தேதி வரை மூன்று மாத காலத்தில் தயாரிக்கப்பட்ட 19,780 ஆல்ட்டோ 800 கார்களையும், 13,318 ஆல்ட்டோ கே10 கார்களையும் திரும்ப அழைக்க உள்ளதாக மாருதி தெரிவித்திருக்கிறது.
பிரச்னை இருப்பது தெரியவந்தால் புதிய தாழ்ப்பாளை இலவசமாக மாற்றித் தரப்படும் என்றும் மாருதி தெரிவித்திருக்கிறது. இந்த திரும்ப பெறும் நடவடிக்கையில் உங்களது ஆல்ட்டோ கார் இடம்பெற்றிருக்கிறதா என்பதை இங்கே உங்கள் காரின் 18 இலக்க வின் நம்பரை கொடுத்து தெரிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








