ஜூன் 7ந் தேதி அறிமுகமாகிறது இந்தியாவுக்கான சுஸுகி எஸ் கிராஸ்!

Written By:

வரும் ஜூன் 7ந் தேதி மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், இந்தியாவுக்கான புதிய சுஸுகி எஸ் கிராஸ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி சுஸுகி விரைவில் களமிறங்க உள்ளது. இதற்காக, எஸ்எக்ஸ்4 ஹேட்ச்பேக் கார் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய கிராஸ்ஓவர் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

Suzuki S Cross
 

இந்தநிலையில், இந்தியாவுக்கான சிறப்பம்சங்கள் கொண்ட மாடலை முதல்முறையாக மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் காட்சிக்கு வைக்க உள்ளது சுஸுகி கார் நிறுவனம்.

வெளிநாடுகளுக்கான சுஸுகி எஸ் கிராஸ் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவுக்கான மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வருகிறது. இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

English summary
S-Cross by Maruti Suzuki will be showcased on 7th of June, 2015. It will not be showcased in India, however, it will be the Indian-spec as well as among several Bollywood stars at IIFA Awards 2015.
Story first published: Saturday, May 30, 2015, 10:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark