மாருதி எஸ் கிராஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!
அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் மாருதி எஸ் கிராஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.
சமீபத்தில் செலிரியோ டீசல் காரை மாருதி கார் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, அடுத்ததாக எஸ் கிராஸ் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசலில் இந்த புதிய கார் வர இருக்கிறது. ரெனோ டஸ்ட்டருக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்படும். மேலும், மாருதி நிறுவனம் பிரிமியம் வகை கார்களுக்காக பிரத்யேக ஷோரூம்களை திறந்து வருகிறது.
அந்த வகையில், சியாஸ் செடான் காருக்கு அடுத்ததாக, இந்த புதிய எஸ் கிராஸ் மாடலும் பிரிமியம் ரக மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த கார் ரூ.8.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. எனவே, விலை பார்த்து முன்பதிவு செய்பவர்கள் பொறுத்திருக்க வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications