மாருதி சுஸுகி நிறுவனத்தின் எஸ்-கிராஸ் ப்ரிமியா எடிஷன் கார் அறிமுகம்
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, மாருதி எஸ்-கிராஸ் காரின் லிமிடெட் எடிஷன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய வாகன சந்தையில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்து கொண்டே இருப்பதால், பல்வேறு நிறுவனங்கள் புதிய வாகனங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றனர்.

லிமிடெட் எடிஷன்;
மாருதி சுஸுகி நிறுவனத்தின் சார்பாக, அறிமுகம் செய்யபட்டுள்ள எஸ்-கிராஸ் கிராஸ்ஓவர் மாடலின் லிமிடெட் எடிஷன் கார், ப்ரிமியா எடிஷன் என பெயர் சூட்டபட்டுள்ளது.
மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் ப்ரிமியா எடிஷன், இந்த நிறுவனத்தின் உயர்த்தும் என நம்பபடுகிறது.

வடிவமைப்பு;
எஸ்-கிராஸ் பிரிமியா, டெல்டா டிடிஐஎஸ் 200 வேரியண்ட்-டை அடிப்படையாக கொண்டுள்ளது.
இது ஏராளமான அம்சங்களுடன் வருகிறது. ஆனால், மெக்கானிக்கல் அடிப்படையில் எந்த மாற்றங்களும் செய்யபடவில்லை.

புதிய அம்சங்கள்;
மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் ப்ரிமியா எடிஷன், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேகுகள், கார்மின் நேவிகேஷன் சிஸ்டம், ரிவர்ஸ் சிஸ்டம் சென்ஸார்கள், ஃபாக் லேம்ப்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் கொண்டுள்ளது.

குறிப்பிட்ட நகரங்களில் மட்டும்;
இந்த மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் ப்ரிமியா எடிஷன், குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.
மாருதி சுஸுகி, இந்த ப்ரிமியா லிமிடெட் எடிஷன் காரை பற்றி அதிக அளவில் தகவல்கள் வெளிபடுத்தவில்லை. மேலும், இந்த கார், எவ்வளவு காலத்திற்கு விற்பனைக்கு கிடைக்கும் எனவும் அறிவிக்கவில்லை.

இஞ்ஜின்;
மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் ப்ரிமியா எடிஷன், 1.3 லிட்டர், 4-சிலிண்டர்கள் உடைய டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின், 89 பிஹெச்பி-யையும், 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த காரின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

விலை;
மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் ப்ரிமியா எடிஷன் கார் 8.99 லட்சம் ரூபாய் விலையில் விற்கப்பட உள்ளது. இந்த லிமிடெட் எடிஷன் எஸ்-கிராஸ் மாருதியின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் விற்கப்பட உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்…
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க


Click it and Unblock the Notifications








