மாருதி சுஸுகி ஸ்விப்ட், ஏஎம்டி வசதியுடன் விரைவில் அறிமுகம்!

Written By:

மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார், ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் மற்றும் தேர்வுகளுக்கு ஏற்ப, கார் உற்பத்தி நிறுவனங்களும், பல்வேறு மேம்படுத்தபட்ட வசதிகளுடன் கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

ஏஎம்டி கொண்ட மாடல்கள்;

ஏஎம்டி கொண்ட மாடல்கள்;

தற்போது, மாருதி நிறுவனம் சார்பாக, பல்வேறு விலை குறைந்த மாடல்கள், ஏஎம்டி வசதியுடன் வருகின்றது.

அதன் தொடர்சியாக, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி, மாருதி சுஸுகி ஸ்விப்ட், எர்டிகா, மற்றும் எஸ்-கிராஸ் உள்ளிட்ட கார்களிலும் சேர்க்கபட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மாருதி சுஸுகியின், 1.2 லிட்டர், கே சீரிஸ் பெட்ரோல் இஞ்ஜினில் மட்டுமே, இந்த 4-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் இணைக்கப்பட உள்ளது.

டீசல் வேரியண்ட்கள், இந்த ஏஎம்டி வசதியுடன் வராது.

ஏஎம்டி மாடலுடன் வரும் இந்த காரின் விலை சற்று கூடுதலாக இருக்கலாம் என தெரிகின்றது.

மறுவடிவமைப்பு;

மறுவடிவமைப்பு;

ஸ்விப்ட் கார்கள் விரைவில் மறுவடிவமைக்கபட்டு, புதிய வடிவில் பல்வேறு சந்தைகளில் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட உள்ளது.

மாருதி சுஸுகியின் புதிய ஸ்விப்ட் கார்கள், எஸ்ஹெச்விஎஸ் (எனப்படும் ஸ்மார்ட் ஹைப்ரிட் வெஹிகிள் பை சுஸுகி) இஞ்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போது கிடைக்கும் ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் இந்த 2017-ஆம் அறிமுகம் செய்யபட உள்ள மாருதி ஸ்விப்ட் விலை குறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் மாடல்களின் விலைகளில் மாற்றம்?

பட்ஜெட் மாடல்களின் விலைகளில் மாற்றம்?

தற்போதைய நிலையில், இந்த 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், பலேனோ, சியாஸ், ஸ்விப்ட் டிசையர் மற்றும் ரிட்ஸ் உள்ளிட்ட கார்களில் வழங்கபடுகின்றது.

சிவிடி அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொண்ட வாகனங்களை வாங்க நினைக்கும் பட்சத்தில், பட்ஜெட் கார்களின் விலை சற்று கூடுதலாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

கூடுதல் வசதி;

கூடுதல் வசதி;

ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், மாருதி நிறுவனத்தின் பல்வேறு மாடல்களில் தேர்வு முறையிலேயே வழங்கபட உள்ளது.

ஒவ்வொரு மாடல் காரையும், தேர்வு முறை ஏஎம்டி அல்லது ஏடி கியர்பாக்ஸுடன் வழங்குவதற்கான முக்கிய நோக்கமே, கார் டிரைவிங் அனுபவத்தின் இனிமையை கூட்டுவது தான் என கூறப்படுகிறது.

English summary
Maruti Suzuki Swift car with Automatic Option could be Launched soon. Automatic gearbox are to be used in Ertiga and S-Cross models also. As of now, Maruti Suzuki is offering the much more affordable Automated Manual Transmission (AMT) in many of their Cars.
Story first published: Friday, December 4, 2015, 10:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark