மாருதி ஸ்விஃப்ட் காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!
வாடிக்கையாளர்களை கவரும் கூடுதல் அம்சங்களுடன், மாருதி ஸ்விஃப்ட் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி ஸ்விஃப்ட் 'Windsong'என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இசை பிரியர்களை கவரும் அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய காரில் இருக்கும் கூடுதல் ஆக்சஸெரீகள், சிறப்பம்சங்களை படங்களுடன், ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட் விபரம்
மாருதி ஸ்விஃப்ட் காரின் Vxi பெட்ரோல் வேரியண்ட்டிலும், Vdi டீசல் வேரியண்ட்டிலும் இந்த லிமிடேட் எடிசன் மாடல் கிடைக்கும்.

கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்
விண்ட்சாங் எடிசன் என்பதை காட்டும் வகையில், ஸ்விஃப்ட் காரில் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

உள்ளலங்காரம்
ஸ்விஃப்ட் விண்ட்சாங் மாடலில் உள்பக்கத்தில் கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது. இது உயர்தரமான உணர்வையும், கவர்ச்சியாகவும் இருக்கிறது.

டச் ஸ்கிரீன் மியூசிக் சிஸ்டம்
இந்த லிமிடேட் எடிசன் மாடலில் டச் ஸ்கிரீன் சோனி மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. புளுடூத், மைக் ஆகிய வசதிகள் கொண்ட இந்த மியூசிக் சிஸ்டம் 55 வாட் திறன் கொண்டது. அனைத்து ஐபோன் மாடல்களையும் கட்டுப்படுத்தும் SIRI தொழில்நுட்ப வசதி, ரிவர்ஸ் கேமராவுக்கான வீடியோ இணைப்பாகவும் இந்த டச் ஸ்கிரீன் சிஸ்டம் செயல்படும்.

சீட் கவர்
மிகவும் சொகுசான, கவர்ச்சியான இருக்கை கவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹெட்ரெஸ்ட்டில் விண்ட்சாங் லிமிடேட் எடிசன் பேட்ஜ் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்
இந்த காரில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களை மாருதி கார் நிறுவனம் நிரந்தர ஆக்சஸெரீயாக வழங்குகிறது.

ஸ்பாய்லர்
பின்புறத்தில் கூரையின்மீது ஸ்பாய்லர் பொருத்தப்பட்டிருப்பதும் காரின் ஏரோடைனமிக்ஸை அதிகரிப்பதுடன், தோற்றப் பொலிவையும் கூட்டுகிறது. ஸ்பாய்லரில் பிரேக் இன்டிகேட்டர் லைட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

டோர் சில் கார்டு
நீல வண்ண விளக்குடன் ஸ்விஃப்ட் பெயருடன் கூடிய இல்லுமினேடட் டோர் சில் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்டிரியர் லைட்
பெடல்கள் இருக்கும் இடத்தில் நீல வண்ண ஆம்பியன்ட் லைட் செட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இது ரம்மியமான உணர்வை தருவதோடு, இருளான நேரத்தில் ஏறி அமர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

மிதியடிகள்
ஸ்விஃப்ட் பேட்ஜ் கொண்ட கூடுதல் ஆக்சஸெரீயாக மிதியடிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

விலை
மாருதி ஸ்விஃப்ட் விண்ட்சாங் விஎக்ஸ்ஐ பெட்ரோல் வேரியண்ட் ரூ.5,14,973 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், விண்ட்சாங் விடிஐ டீசல் வேரியண்ட் ரூ.6,10,246 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








