சுஸுகி பெலெனோ... மாருதியின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் பெயர்!!
மாருதி நிறுவனம் உயர்வகை ஹேட்ச்பேக் கார் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பது தெரிந்ததே. தற்போது YRA என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த காரை பெலெனோ என்ற பெயர் சூட்டி விற்பனைக்கு கொண்டு வர சுஸுகி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே, மாருதி பெலெனோ கார் ரேஸ் பிரியர்கள் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கார் விரும்பிகளின் மத்தியில் நிலைத்து நிற்கும் நிலையில், அந்த பிராண்டு பெயருக்கு புத்துயிர் கொடுத்து வர இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

பிரிமியம் மாடல்
சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எஸ் க்ராஸ் என்ற க்ராஸ்ஓவர் மாடலைத் தொடர்ந்து, அடுத்ததாக நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டு இருக்கிறது.

சுஸுகி பேட்ஜ்
இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரும் மாருதி பிராண்டு சின்னங்கள் இல்லாமல், சுஸுகி பேட்ஜ் கொண்டதாக வருகிறது. சுஸுகி பெலெனோ என்ற பெயரில் சந்தைக்கு வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை
சுஸுகி பெலெனோவின் பேஸ் மாடல் ரூ.7.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரலாம் என்று தகவல்களும், கணிப்புகளும் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த விலையை நிர்ணயித்தால் போட்டியாளர்களை சமாளிப்பதில் நெருக்கடி வரலாம்.

போட்டியாளர்கள்
புதிய ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். கார் பிரியர்களின் கைகளில் இன்றளவும் தவழ்ந்து வரும் பலெனோ காரின் பெயர் மீண்டும் ஒரு கார் மூலமாக புத்துயிர் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








