இந்தியா வரும் பென்ஸ் சி கிளாஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடல்!
இந்த ஆண்டு 15 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதில், புதுப்பொலிவு பெற்ற மாடல்கள் தவிர்த்து, சில புதிய மாடல்களும் அடக்கம்.
இந்த வரிசையில் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், மெர்சிடிஸ் பென்ஸ் சி63 எஸ் என்று அழைக்கப்படும் இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

டிசைன்
இந்த புதிய பெர்ஃபார்மென்ஸ் மாடலில் ஏஎம்ஜி பாடி கிட் கொண்டதாக இருக்கும். எனவே, பார்ப்பதற்கு சாதாரண சி கிளாஸ் காரிலிருந்து சிறிது வேறுபட்டிருக்கும்.

ஒரே மாடல்
தற்போது வெளிநாடுகளில் இருவிதமான சக்தியை கொண்டதாக இந்த கார் விற்பனையில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஒரேயொரு மாடலில் மட்டுமே இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின்
இந்த காரில் 503 பிஎச்பி பவரையும், 699.22 என்எம் டார்க்கையும் வழங்கும் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் தொடடுவிடும் ஆற்றல் வாய்ந்தது. லிட்டருக்கு 14.66 கிமீ மைலேஜ் தரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

போட்டி
இந்தியாவில் தனது ஏஎம்ஜி பிராண்டில் பல பெர்ஃபார்மென்ஸ் கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை செய்து வருகிறது. அதில், இந்த காரும் இணைய உள்ளது. பிஎம்டபிள்யூ எம்3 பெர்ஃபாமென்ஸ் செடான் காருக்கு இந்த கார் நேரடி போட்டியாக இருக்கும்.

விலை
ரூ.1,25,00,000 விலையில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








