மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்63 ஏஎம்ஜி சொகுசு செடான் கார் விற்பனைக்கு வந்தது!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் உயர்வகை சொகுசு கார் மாடலான எஸ்63 ஏஎம்ஜி செடான் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் எஸ்63 ஏஎம்ஜி 'கூபே' மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தற்போது செடான் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.
பென்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற எஸ் கிளாஸ் சொகுசு காரின் அதிக சக்திவாய்ந்த மாடலாக இந்த புதிய கார் வந்திருக்கிறபது. பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய கார் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஏஎம்ஜி பாடி கிட்
ஏஎம்ஜி பாடி கிட் பொருத்தப்பட்டிருப்பதால் சற்று மிரட்டலான செடான் மாடலாகவும், மிக உயர்தரமான பெர்ஃபார்மென்ஸ் கார் மாடலை விரும்புவோர்க்கு இது சிறந்த தேர்வாகவும் இருக்கும்.

எஞ்சின்
எஸ் கிளாஸ் காரின் அதிக சக்திவாய்ந்த எஸ்63 ஏஎம்ஜி மாடலில் 577 பிஎச்பி சக்தியையும், 900 என்எம் டார்க்கையும் வாரி வழங்கக்கூடிய 5.5 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த காரில் 7 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடுஷிஃப்ட் எம்சிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கிறது.

செயல்திறன்
இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

சிறப்பம்சங்கள்
ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பர்ம்ஸ்டெர் 3டி ஆடியோ சிஸ்டம், மெட்டாலிக் பெயிண்ட், டயர் பிரஷர் வார்னிங் சிஸ்டம், சக்திவாய்ந்த எல்இடி முகப்பு விள்ககுகள் போன்ற ஏராளமான சிறப்பம்சங்களை தாங்கி வந்திருக்கிறது. தவிர்த்து, அட்டென்ஷன் அசிஸ்ட், கொலிஷன் பிரிவென்ஷன் சிஸ்டம் போன்ற நவீன பாதுகாப்பு வசதிகளும் உள்ளது.

விலை
ரூ.2.53 கோடி பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








