மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு

Written By:

மெர்சிடிஸ் நிறுவனம், பொலிவு கூட்டபட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் காரை இந்தியாவில், இந்த மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சொகுசு கார்களின் சந்தை இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வருகின்றது. இந்த புதிய முன்னேற்றத்தால், மெர்சிடிஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சொகுசு கார்களை அதிக அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றனர்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் காரை பற்றிய கூடுதல் தகவலகளை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

‘15-ல் 15’ கார்கள் அறிமுகம்;

‘15-ல் 15’ கார்கள் அறிமுகம்;

மெர்சிடிஸ் நிறுவனம், "(2015) 15-ல் 15" என்ற அடிப்படையில், 2015-ஆம் ஆண்டில் 15 கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது.

அந்த வகையில், இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் கார், 2015-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட உள்ள 15-வது கார் என்பது முக்கிய செய்தியாகும்.

எக்ஸ்டீரியர் அமைப்பு;

எக்ஸ்டீரியர் அமைப்பு;

இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் ஹேட்ச்பேக் காரின் இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் அமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யபட்டு, மேம்படுத்தபட்டுள்ளது.

எக்ஸ்டீரியர் (வெளிப்புற) அமைப்பை பொறுத்த வரை, புதிய வகையிலான பம்பர்கள், டெய்ல் லேம்ப்கள், மற்றும் எக்ஹாஸ்ட் டிப்ஸ்கள் சேர்க்கபட்டுள்ளது.

இண்டீரியர் அமைப்பு;

இண்டீரியர் அமைப்பு;

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் ஹேட்ச்பேக் காரின் இண்டீரியரை பொறுத்த வரை, புதிய இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்ஃபோன் ஒருங்கிணைப்புடன் (ஸ்மார்ட்ஃபோன் இண்டெக்ரேஷன்) கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கபட்டு மேம்படுத்தபட்டுள்ளது.

இத்தகைய ஸ்மார்ட்ஃபோன் இண்டெக்ரேஷன், இந்த வகையில் முதல் முறையில் செய்யபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

பெயரிடப்படும் முறை;

பெயரிடப்படும் முறை;

இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் கார், மெர்சிடிஸ் பென்ஸின் புதிய முறையில் பெயரிடப்படுகிறது.

இதன் டீசல் மாடல்களின் சிடிஐ பேட்ஜ் மாடல் பெயருக்கு பதிலாக, வெரும் ‘டி' மட்டும் கொண்டு பெயரிடப்படும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

தற்போது கிடைக்கும் பென்ஸ் ஏ-கிளாஸ் கார்களில் உபயோகிக்கப்படும் இஞ்ஜின்களே, பொலிவு கூட்டபட்ட மெர்சிடிஸ் இந்த புதிய பென்ஸ் ஏ-கிளாஸ் காரில் உப்யோகிக்கபட உள்ளது.

இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் கார், இரண்டு இஞ்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கின்றது. முதலாவதாக, 1,995 சிசி, 4-சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின், 120 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இரண்டாவதாக, 2,143 சிசி, 4-சிலிண்டர்கள் கொண்ட டீசல் இஞ்ஜின் 134 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த இரண்டு விதமான இஞ்ஜின்களும், 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

அறிமுக தேதி;

அறிமுக தேதி;

பொலிவு கூட்டபட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் கார், இந்தியாவில் வரும் டிசம்பர் 8, 2015-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளது.

English summary
Mercedes-Benz A-Class Facelift Car India Launch date is confirmed. The German carmaker is adopting new Strategy called "15 in '15". According to this strategy, Mercedes was planning to launch 15 Car models in India in 2015. This New Facelifted Mercedes-Benz A-Class is the 15th Car to be released in the year 2015.
Story first published: Wednesday, December 2, 2015, 17:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark