2016 மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் விற்பனைக்கு வந்தது

By Ravichandran

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தங்களின் பொலிவு கூட்டபட்ட புதிய 2016 ஏ கிளாஸ் (பேஸ்லிஃப்ட்) காரை அறிமுகம் செய்துள்ளனர்.

மெர்சிடிஸ் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு மற்றும் இந்திய கார் உற்பத்தி நிறுவனங்கள், சமீக காலமாக அதிக அளவில் கார்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ள புதிய 2016 மெர்சிடிஸ் பென்ஸ் புதிய ஏ கிளாஸ் காரை பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இஞ்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் விவரக்குறிப்புகள்;

இஞ்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் விவரக்குறிப்புகள்;

இந்த 2016 மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ், முந்தைய மாடல் காரின் அதே இஞ்ஜின் தேர்வுகளை கொண்டிருக்கும்.

இது 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் 1.6 பெட்ரோல் லிட்டர் இஞ்ஜின், 121 பிஹெச்பி-யையும், 200 என் எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

2.2 லிட்டர் டீசல் இஞ்ஜின், 135 பிஹெச்பி-யையும், 300 என் எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் 2 இஞ்ஜின்களுமே, 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

இந்த புதிய ஏ கிளாஸ் கார், எக்ஸ்டீரியரிலும், இண்டீரியலும், பல்வேறு மேம்பாடுகளை பெற்றுள்ளது.

எக்ஸ்டீரியர் (வெளிப்புற) அம்சங்கள் என்ற வகையில், 2016 மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் கார், மறுவடிவமைக்கபட்ட பம்பர்கள், ஹெட்லைட் மற்றும் டெய்ல் லேம்ப்கள் கொண்டுள்ளது.

முந்தைய தலைமுறை காரை காட்டிலும், இந்த புதிய மாடல் மெல்லிய தோற்றம் கொண்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

இண்டீரியர் (உட்புற) அம்சங்கள் என்ற வகையில், ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்புடன் கூடிய 8-இஞ்ச், தொடுதிரை (டச் ஸ்கிரீன்) இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

இது ஆப்பிள் கார் பிளே மற்றும் மிர்ரர்லிங்க் கொண்டுள்ளது.

2016 மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் காரின் டேஷ்போர்ட் மற்றும் இருக்கைகள் (ஸீட்), புதிய விதமான பொருட்களால் தயார் செய்யபட்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

2016 மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இதில், 6-ஏர் பேக்குகள், அட்டென்ஷன் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட் (பிஏஎஸ்), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

மேலும், இதில், டையர் பிரஷர் மானிட்டரிங் ஹில் ஸ்டார்ட் மற்றும் ஆடாப்டிவ் பிரேக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கபட்டுள்ளது.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

இந்த 2016 மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் காரானது, எல்பைட்கிரீன், சிர்ரஸ் வைட், ஜுப்பீட்டர் ரெட், காஸ்மோஸ் பிளாக் மற்றும் போலார் சில்வர் உள்ளிட்ட 5 வண்னங்களில் கிடைக்கின்றது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

இந்திய வாகன சந்தைகளை பொருத்தவரை, பொலிவு கூட்டபட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் 2016 ஏ கிளாஸ் (பேஸ்லிஃப்ட்), வால்வோ வி40, பிஎம்டபுள்யூ எக்ஸ்1 உள்ளிட்ட கார்களிடம் போட்டியை எதிர்கொள்ள நேரிடும்.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் ஏ 180 ஏ ஸ்போர்ட் (பெட்ரோல்) - 24.95 லட்சம் ரூபாய்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் ஏ 200 டி (டீசல்) - 25.95 லட்சம் ரூபாய்

குறிப்பு; இந்த விலை விவரங்கள் எக்ஸ் ஷோரூம் மும்பை விலை என்பது குறிப்பிடதக்கது.

‘15’ல் 15’ கார்கள்;

‘15’ல் 15’ கார்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், ‘15'ல் 15' கார்கள் என்ற சித்தாந்தத்தின் படி, 2015-ஆம் ஆண்டில் 15 அறிமுகம் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

அதன் படி, 2015-ஆம் ஆண்டில், 15-வது காராக, 2016 மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் (பேஸ்லிஃப்ட்) காரை, இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தனர்.

Most Read Articles
English summary
Mercedes-Benz A-Class Facelift was launched in India recently. This 2016 facelifted Mercedes-Benz A-Class is launched as the 15th product to be launched in India this year, under the 15 in '15 strategy from the German Car maker.
Story first published: Tuesday, December 8, 2015, 15:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X