மெர்சிடிஸ் பென்ஸ் ஜிடி- எஸ் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி உறுதியானது!
மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி- எஸ் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி உறுதி செய்யபட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிடி- எஸ் சூப்பர் காரானது இந்தியாவில் நவமபர் 24-ஆம் தேதி அறிமுகம் செய்யபடுகிறது.
இந்தியாவில், 15-ல் 15 கார்கள் அறிமுகம் (2015-ஆம் ஆண்டில், 15 கார்கள் அறிமுகம்) என்ற மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் அதிரடி திட்டத்தின் கீழ், வெளியிடப்படும் 14-வது காராக ஜிடி- எஸ் கார் வருகிறது.

பிரத்யேக மாடல்
மெர்சிடிஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரை அடுத்து, ஜிடி- எஸ் காரானது, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி நிறுவன இஞ்ஜினியர்களால் வடிவமைக்கப்பட்ட இரண்டாவது ஸ்போர்ட்ஸ் காராக திகழ்கிறது. ஜிடி- எஸ் கார், இந்தியாவில் கிடைக்க உள்ள ஏஎம்ஜி-யின் ஐந்தாவது தயாரிப்பாக விளங்குகிறது.
இஞ்ஜின்;
ஜிடி- எஸ் கார் 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 503 பிஹெச்பியும், உச்சபட்சமாக 650 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்த கூடியதாகும். 7-ஸ்பீட் ஏஎம்ஜி ஸ்பீட்ஷிஃப்ட் கியர்பாக்ஸ் மூலம் திறன் வெளியிடப்படுகிறது.
செயல்திறன்
இதன் மூலம், இந்த கார் மணிக்கு, 0 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.8 நொடிகளில் எட்டி விடுகிறது. இது அதிகப்படியாக மணிக்கு 311 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டக்கூடிய திறன் கொண்டுள்ளது.

பிற அம்சங்கள்;
ஜிடி- எஸ் ஸ்போர்ட்ஸ் கார், ஸ்டாண்டர்ட் மெக்கானிக்கல் ரியர் டிஃபரென்ஷியல் அம்சங்களை கொண்டுள்ளது. ஏஎம்ஜி ரைடு கண்ட்ரோல், மூன்று விதமான டேம்பிங் (சஸ்பென்ஷன்) மாறுதல் செய்யக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது. இந்த மூன்று செட்டிங்குகளில் இருந்து, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தவையை தேர்வு செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்;
இந்த ஜிடி- எஸ் காரில், ஏர்பேக்குகள், தடத்தை கண்காணிக்கும் வசதி, அடாப்டிவ் ஹை பீம், மோதல் தடுப்பு தொழில்நுட்பம், டயர் பிரஷர் மானிட்டர், கண்ணுக்கு புலப்படாத பகுதிகளில் வரும் ஆபத்துக்களை எச்சரிக்கும் வசதி, மற்றும் ஹை-பெர்ஃபார்மான்ஸ் பிரேக்குகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது.



Click it and Unblock the Notifications








