மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு வந்தது!

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ஏஎம்ஜி பிராண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் 5வது மாடலாக இந்த ஸ்போர்ட்ஸ் கார் வந்துள்ளது.

அதிசக்திவாய்ந்த எஞ்சினும், அட்டகாசமான தோற்றமும் கொண்ட இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரின் விபரங்கள் குறித்து அறிமுக இடத்திலிருந்து எமது நிருபர் அஜிங்கியா வழங்கியிருக்கும் நேரடி தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புறத் தோற்றம்

வெளிப்புறத் தோற்றம்

எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில்லைட்டுகள் ஆகியவை வசீகரிக்கின்றன. முன்புறத்தில் நீண்ட மூக்கு போன்ற பானட்டும், மொழுக்கையான கூரை மற்றும் பின்புற அமைப்பும் பிற ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களிலிருந்து இதனை வேறுபடுத்துகின்றன. கருப்பு வண்ண அலாய் வீல்கள், சைடு மிரர்கள் ஆகியவை அழகு சேர்க்கின்றன.

இன்டீரியர்

இன்டீரியர்

இரண்டு கதவுகள் அமைப்புடைய இந்த காரின் உட்புறத்திற்குள் நுழைந்தவுடன் மிகவும் ஸ்போர்ட்டியாகவும், தரமும், நேர்த்தியும் நம் மனதை குளிர்விக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், பக்கெட் இருக்கைகள், 8.4 இன்ச் டச்ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை குறிப்பிட்டு கூறத்தக்கதாக உள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் கார் மாடலில் 503 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல, இரட்டை டர்போ சார்ஜர்கள் கொண்ட 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 7 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடுஷிஃப்ட் டிசிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

செயல்திறன் விபரம்

செயல்திறன் விபரம்

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் 0- 100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சமாக 310 கிமீ வேகம் வரை தொடக்கூடியது. 5 விதமான டிரைவிங் ஆப்ஷன்களில் தேர்வு செய்து ஓட்டக்கூடிய வசதியும் உண்டு.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டபுள் விஷ்போன் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பு, எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் டேம்பர்கள், விபத்தை தவிர்க்க அவசர சமயத்தில் உதவும் தானியங்கி பிரேக் சிஸ்டம், அட்டென்ஷன் அசிஸ்ட், தடம் மாறுவதை எச்சரிக்கும் வசதி, மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பல பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

கஸ்டமைசேஷன் வசதி

கஸ்டமைசேஷன் வசதி

இந்த காருக்கு 10,000க்கும் மேற்பட்ட கஸ்டமைஸ் ஆக்சஸெரீகளை மெர்சிடிஸ் பென்ஸ் வழங்குகிறது.

விலை விபரம்

விலை விபரம்

ரூ.2.40 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

 
English summary
Mercedes-Benz has launched the AMG GT S in India for Rs. 2.4 crore ex-showroom (Delhi). The Mercedes AMG GT S two-door sports car is the German carmaker's 14th product to be launched in India as per the company's 15 in '15 strategy.
Story first published: Tuesday, November 24, 2015, 14:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark