மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை விற்பனையில் இருந்த மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல்- க்ளாஸ் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடலாகவும், புதிய பெயரிலும் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அசெம்பிள்
இந்தியாவிலேயே இந்த புதிய ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இறக்குமதி வரி தவிர்க்கப்படுவதால், விலையிலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

எஞ்சின்
இந்த புதிய சொகுசு எஸ்யூவி இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களில் வந்திருக்கிறது. 250டி மாடலில் இருக்கும் 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் 204 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வழங்கும். மற்றொரு 350டீ மாடலில் இருக்கும் டீசல் எஞ்சின் 258 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வழங்கும். இரு எஞ்சின் ஆப்ஷன்களிலும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தொழில்நுட்ப வசதியும் உண்டு

பாதுகாப்பு அம்சங்கள்
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், அட்டென்ஷன் அசிஸ்ட் மற்றும் பிரேக் அசிஸ்ட் ப்ளஸ் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

விலை விபரம்
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 250டீ: ரூ.58.9 லட்சம்
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 350டீ: ரூ.69.9 லட்சம்
[டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை]

வரிசை கட்டும் பென்ஸ்
இந்த ஆண்டில் மொத்தம் 15 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்தது. அதன்படி, இந்த ஆண்டு இந்தியாவில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் 13வது கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புதிய கார் மாடல்களின் வருகை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனையில் வலு சேர்த்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் விற்பனை இந்த ஆண்டில் 10,000ஐ கடந்து புதிய மைல்கல்லை நோக்கி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








