மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் விலை உயர்கிறது.

Written By:

வரும் ஜனவரி முதல் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை உயர்த்தப்படுகிறது.

பிஎம்டபுள்யூ உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கார் நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை உயர்த்தி வருகின்றனர் அல்லது விலையை உயர்த்த உள்ளதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

விலை ஏற்றம்-அமலாகும் தேதி;

விலை ஏற்றம்-அமலாகும் தேதி;

வரும் ஜனவரி 1, 2016-ஆம் தேதி முதல், மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் உயர்த்தபட உள்ளது.

விலை ஏற்றம்-எவ்வளவு?

விலை ஏற்றம்-எவ்வளவு?

மெர்சிடிஸ் பென்ஸ் அனைத்து தயாரிப்புகளும் 2% என்ற அளவில் விலை உயர உள்ளதாக தெரிகிறது.

எனினும், எந்த மாடல் எவ்வளவு விலை உயர உள்ளது என்ற தெளிவான விவரங்கள் இதுவரை தெளிவாகவில்லை. ஜனவரி 2016-ல் தான் வெளியாக தெரியும்.

இந்தியா முழுவதிலும் விலை ஏற்றம்;

இந்தியா முழுவதிலும் விலை ஏற்றம்;

மெர்சிடிஸ்-பென்ஸ் தயாரிப்புகள் மீது செய்யபட உள்ள விலை ஏற்றம், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தபட உள்ளது.

விலை ஏற்றதிற்கு தெரிவிக்கபடும் காரணம்;

விலை ஏற்றதிற்கு தெரிவிக்கபடும் காரணம்;

கார்களின் உற்பத்தி செலவுகளும், உள்ளீடுகளுக்கான முதலீடுகளின் விலை அதிகரிப்பும் தான், மெர்சிடிஸ் பென்ஸ் தங்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்த முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் இந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 15 கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

மெர்சிடிஸ் பென்ஸ், இந்தியாவில் தற்போது ஆடி, பிஎம்டபுள்யூ, மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போட வேண்டிய நிலையில் உள்ளது.

ஃபைனான்ஸ் ஏற்பாடுகள்;

ஃபைனான்ஸ் ஏற்பாடுகள்;

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தங்களின் கார்களின் விலைகளை உயர்தினாலும், வாடிக்கையாளர்கள் இன்னல்கள் இல்லாமல் கார்களை வாங்க ஃபைனான்ஸ் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

இந்த ஃபைனான்ஸ் ஏற்பாடுகளுக்கான ஆஃபர்கள், ஸ்டார் ஃபைனான்ஸ், ஸ்டார் அஜிலிட்டி, ஸ்டார் லீஸ் மற்றும் கார்பரேட் ஸ்டார் லீஸ் மூலம் வழங்கபடுகிறது.

போட்டியில் விலை ஏற்றம்?

போட்டியில் விலை ஏற்றம்?

முதலில், பிஎம்டபுள்யூ தங்களின் அனைத்து கார்களின் மீதும், 1 ஜனவரி 2016 முதல் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்தது.

இதையடுத்து, தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும், தொடர்ந்து இந்தியாவில் லாபம் ஈட்டுவதற்கான காரணத்தை மையபடுத்தி, தங்கள் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அடுத்த அறிமுகம்;

அடுத்த அறிமுகம்;

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், 2015-ஆம் ஆண்டில், ‘15-ல் 15' கார்கள் அறிமுகம் என்ற தங்களின் திட்டத்தின் படி செயல்பட்டு வருகின்றனர்.

இத்திட்டத்தின் படி, தங்களின் 15-வது காரை டிசம்பர் 8, 2015-ல் அறிமுகம் செய்ய உள்ளனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் என்று பெயரிடபட்டுள்ள இந்த கார், இளைஞர்களுக்கு பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அனுபவத்தை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யபடுவதாக கூறபடுகிறது.

English summary
Mercedes-Benz are increasing Prices of their cars In India from January 2016. Starting from January 1, 2016 onwards, rise in ex-showroom prices of Mercedes-Benz Cars are to come to effect. Mercedes-Benz India justifies this price hike by saying that, rise in input cost is major reason for this price hike.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark