அனைத்து கார்களின் விலையையும் 4 சதவீதம் உயர்த்துவதாக பென்ஸ் அறிவிப்பு
அனைத்து கார்களின் விலையையும் 4 சதவீதம் அதிகரிப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. வரும் 22ந் தேதி முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஏற்பட்டிருக்கும் இழப்பை ஈடுகட்டும் விதமாக இந்த விலை உயர்வு முடிவை எடுத்ததாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

ரூ.26 லட்சம் முதல் ரூ.1.44 கோடி வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் சொகுசு கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. தவிர, ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் ரூ.68.5 லட்சம் முதல் ரூ.1.8 கோடி வரையிலான விலையில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், கார்களின் விலை 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும்.


Click it and Unblock the Notifications








