பென்ஸ் கார்களை ஓட்டிப் பார்த்து மெய்சிலிர்த்த வாடிக்கையாளர்கள்!

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வாடிக்கையாளர்களும், அந்த கார்களை வாங்க திட்டமிடுபவர்களும் ஓட்டிப் பார்ப்பதற்கான பிரத்யே டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படுகிறது.

இதனை லக்ஸ்டிரைவ் என்ற பெயரில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தநிலையில், பெங்களூரில், இதுபோன்ற ஒரு டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சி இன்று நடந்தது. பெங்களூர், நைஸ் ரோட்டில் வரஹசந்திரா என்ற இடத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Benz 1
 

மெர்சிடிஸ் எஸ்யூவி மற்றும் செடான் சொகுசு கார் மாடல்களின் வல்லமைகள் மற்றும் சிறப்பம்சங்களை உணர்ந்துகொள்ளும் விதத்தில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை மற்றும் டிராக்கில் அந்த கார்களை பயிற்றுனர்களின் உதவியுடன் வாடிக்கையாளர்கள் ஓட்டி பார்த்தனர்.

Benz 2
 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணாவின் சுவைமிகு உணவுகளை ருசித்து பார்க்கும் வாய்ப்பையும் மெர்சிடிஸ் பென்ஸ் வழங்கியது. எந்தெந்த பாடி ஸ்டைல் காருக்கு எந்தவிதமான உடை பொருத்தமாக இருக்கும் என்பது பற்றி தி கலெக்ட்டிவ் பேஷன் ஷோரூமின் நிபுணர்கள் வாடிக்கையாளர்களுக்கு டிப்ஸ்களை வழங்கினர்.

Benz 3
Benz 4
Benz 5
Benz 6
Benz 7
English summary
On 25th April, 2015 the German luxury car maker offered a taste of luxury to the citizens of Bengaluru. Mercedes-Benz have successfully organized its LuxeDrive in several cities of India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X