கோவையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சார்பில் பிரத்யேக லக்ஸ்டிரைவ் நிகழ்ச்சி...!!

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் சார்பாக லக்ஸ்டிரைவ் என்ற பெயரிலான பிரத்யேக டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சி கோயமுத்தூரில் இன்றும், நாளையும் நடக்கிறது.

முன்னதாக, இந்த ஆண்டில் லக்ஸ்டிரைவ் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. 2015-ஆம் ஆண்டில், இந்திய சந்தைக்காக 'லிவ் தி பெஸ்ட்' என்ற சித்தாந்தத்தை ஏற்று கொண்டு அதற்கு தகுந்தவாறு அதன் நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றது.

இந்த லக்ஸ்டிரைவ் நிகழ்ச்சியில், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் உயர் அதிகாரி ரோலண்ட் ஃபோல்கர், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஷரத் விஜயராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான இந்த பிரத்யேக டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சி, கோயம்புத்தூரில், செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கரி ஸ்பீட்வேயில் நடத்தபட்டது. இன்று துவங்கிய இந்த லக்ஸ்டிரைவ் நிகழ்ச்சி, நாளையும் நடைபெற உள்ளது. இதில், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி மாடல்களும் மற்ற வழக்கமான லக்சுரி (சொகுசு) வாகனங்களும் காட்சிபடுத்தபட்டுள்ளது.

முன்னதாக, மெர்சிடிஸ் பென்ஸின் இந்த லக்ஸ்டிரைவ், சண்டிகர், குர்கான், ஜெய்பூர், சூரத், மும்பை, பெங்களூரூ, சென்னை, ராஞ்சி, நாக்பூர், கோவா, பூனே உள்ளிட்ட நகரங்களில் நடத்தபட்டு, தற்போது கோயம்புத்தூரில் நிகழ்கிறது.

லக்ஸ்டிரைவ் நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் பங்கேற்பாளர்கள், மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு எஸ்யூவி-க்களை பிரத்யேக அமைக்கப்பட்ட மேடைகளிலும், சிமுலேட்டட் பம்ப்களிலும் இயக்கி அனுபவங்கள் பெறலாம்.

ஏஎம்ஜி மற்றும் இதர செடான்களை இந்த மையத்திலும் இயக்கி சோதித்து பார்க்கலாம். நிபுணத்துவம் பெற்ற டிரைவர்கள் இந்த கார்களின் உண்மையான திறனை உணத்தும் வகையில், அவற்றை திறன்பட இயக்கி காண்பிக்கின்றனர்.

லக்ஸ்டிரைவ் நிகழ்ச்சியில் 100 பிரிமியம் மற்றும் லக்சுரி டிசைனர் பிராண்ட்களும் காட்சிபடுத்தபடுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்காக மெர்சிடிஸ் பென்ஸ் ஆக்ஸசரீஸ் மற்றும் இதர மெர்சண்டைஸ் பொருட்களும் காட்சிபடுத்தபட்டுள்ளது.

English summary
Mercedes-Benz LuxeDrive has been Organised In Coimbatore. Coimbatore edition of LuxeDrive was organised at Kari Speedway, Chettipalayam, Tamil Nadu, 641201. Earlier, the LuxeDrive was held in various other locations across India in 2015.
Story first published: Saturday, December 5, 2015, 19:04 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos