மெர்சிடிஸ்பென்ஸ் நிறுவனத்தின், புதிய எஸ்எல்சி ரோட்ஸ்டர் கார் அறிமுகம்

By Ravichandran

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ்எல்சி ரோட்ஸ்டர் காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்சி ரோட்ஸ்டர் கார், அடுத்த மாதம் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடைபெற உள்ள ஆட்டோ ஷோவில் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய எஸ்எல்சி ரோட்ஸ்டர் தொடர்பான புதிய தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

எஸ்எல்கே கிளாஸ் மாடலுக்கு மாற்று?

எஸ்எல்கே கிளாஸ் மாடலுக்கு மாற்று?

மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய எஸ்எல்சி ரோட்ஸ்டர், எஸ்எல்கே கிளாஸ் மாடலுக்கு நேரடி மாற்றாக அமைய உள்ளதாக தெரிகிறது.

மேலும், பெயரும், புதிய எஸ்எல்சி ரோட்ஸ்டர் மாடலின் பெயரும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெயரிடும் முறைப்படியே, பெயர் சூட்டபட்டுள்ளது.

கிடைக்கும் வேரியண்ட்கள்;

கிடைக்கும் வேரியண்ட்கள்;

புதிய எஸ்எல்சி கிளாஸ், 5 வேரியண்ட்களில் கிடைக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் சார்பாக தயாரிக்கபடும், இந்த வேரியண்ட்கள், எஸ்எல்சி180, எஸ்எல்சி200, எஸ்எல்சி250டி, எஸ்எல்சி300 மற்றும் டாப் வேரியண்ட்-டான எஸ்எல்சி43 ஏஎம்ஜி என பெயரிடபட்டுள்ளது.

எஸ்எல்சி180, எஸ்எல்சி200 கியர்பாக்ஸ் அமைப்பு;

எஸ்எல்சி180, எஸ்எல்சி200 கியர்பாக்ஸ் அமைப்பு;

எஸ்எல்சி180 மற்றும் எஸ்எல்சி200 உள்ளிட்ட வேரியண்ட்கள், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது.

எஸ்எல்சி180 மற்றும் எஸ்எல்சி200 உள்ளிட்ட வேரியண்ட்களில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு முறையில் கூடுதலாக கிடைக்கின்றது.

எஸ்எல்சி180 இஞ்ஜின்;

எஸ்எல்சி180 இஞ்ஜின்;

எஸ்எல்சி180 கார், 1.6 லிட்டர், 4 சிலிண்டர்கள் உடைய டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது, 154 பிஹெபி-யையும், 250 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எஸ்எல்சி200, எஸ்எல்சி300 மாடல்களின் இஞ்ஜின்;

எஸ்எல்சி200, எஸ்எல்சி300 மாடல்களின் இஞ்ஜின்;

எஸ்எல்சி200 கார், 1.9 லிட்டர், டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 181 பிஹெபி-யையும், 300 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எஸ்எல்சி300 மாடல், 1.9 லிட்டர், டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. மெர்சிடிஸின் புதிய 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள இது, 241 பிஹெபி-யையும், 370 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எஸ்எல்சி250டி காரின் இஞ்ஜின்;

எஸ்எல்சி250டி காரின் இஞ்ஜின்;

எஸ்எல்சி250டி மாடல், மெர்சிடிஸின் 2.1 லிட்டர், 4 சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

மெர்சிடிஸின் புதிய 9-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள இது, 201 பிஹெபி-யையும், 500 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எஸ்எல்சி43 ஏஎம்ஜி பற்றி...

எஸ்எல்சி43 ஏஎம்ஜி பற்றி...

எஸ்எல்சி ரேஞ்ஜ்களில், எஸ்எல்சி43 ஏஎம்ஜி தான் மிக உயரிய வேரியண்டாக திகழ்கிறது.

எஸ்எல்சி43 ஏஎம்ஜி டர்போ சார்ஜ்ட், 3.0 லிட்டர், டர்போசார்ஜ்ட் வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது. இது மெர்சிடிஸின் புதிய 9-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

வெரும் 2000 ஆர்பிஎம்களில், இது 362 பிஹெபி-யையும், 520 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எஸ்எல்சி43 ஏஎம்ஜி திறன்;

எஸ்எல்சி43 ஏஎம்ஜி திறன்;

எஸ்எல்சி43 ஏஎம்ஜி கார், நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்சமாக, இது மணிக்கு 250 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

ஸ்டைல்;

ஸ்டைல்;

ஸ்டைல் பொருத்த வரை, எஸ்எல்சி மாடல், மேம்பட்ட இஞ்ஜின் கூளிங்-கிற்காக பெரிய இன்-டேக்கு-கள் உடைய புதிய ஃப்ரண்ட் பம்பர்கள் கொண்டுள்ளது.

இது டைமண்ட் வடிவ இன்சர்ட் டிசைன் உடைய மாற்றம் செய்யபட்ட (ஆல்டர்ட்) கிரில்-லும் கொண்டுள்ளது.

மேலும், எல்ஈடி டே-டைம் ரன்னிங் லைட்கள் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய ஹெட்லைட்டுகளையும் கொண்டுள்ளது.

ரியர், இண்டீரியர்;

ரியர், இண்டீரியர்;

எஸ்எல்சி மாடல் கார்களின் ரியர் மற்றும் இண்டீரியர்களில் சில குறிப்பிடதக்க மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

எஸ்எல்சி மாடலின் ரியரை பொருத்த வரை, புதிய எல்ஈடி டெய்ல்-லைட் கிராஃபிக்ஸ் சேர்க்கபட்டுள்ளது. மேலும், இதன் டெய்ல்பைப்கள் பம்பருடன்

ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது நன்கு கவணிக்க கூடிய வகையிலான டிஃப்யூஸரை கொண்டுள்ளது.

இண்டீரியர் (உட்புற) அம்சங்களை பொருத்த வரை, எஸ்எல்கே மற்றும் எஸ்எல்சி கார்களுக்கும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. எஸ்எல்சி மாடல்கள், பெரிய 4-இஞ்ச் அளவிலான இன்ஃபோடெய்ன்மெண்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

லக்கேஜ் கவர்களை அதற்கான இடத்தில் செட் செய்யாமலேயே, தி ஃபோல்டிங் ரூஃப் எனப்படும் மடங்க கூடிய மேற்கூரையை திறக்க முடியும்.

இந்த ஃபோல்டிங் ரூஃப், மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் திறந்து கொள்ள கூடிய திறன் கொண்டுள்ளது.

விலை;

விலை;

இந்த எஸ்எல்சி மாடல்களின் விலை விவரங்கள் எதுவும் வெளியிடபடவில்லை.

எஸ்எல்கே மாடல் கார்கள் அறிமுகம் செய்யபட்டு, சுமார் 20 ஆண்டுகள் நிறைவடையும் கட்டத்தில், எஸ்எல்சி மாடல்கள் மார்ச் 2016-ல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் விற்கபட உள்ளது.

Most Read Articles
English summary
The new SLC Roadster was unveiled by Mercedes-Benz, ahead of its official debut at the North American International Auto Show in Detroit. The new SLC Class is touted to be the direct replacement for the SLK class. The SLC Models are available in five different variants, the SLC180, SLC200, SLC250d, SLC300 and the top variant - SLC43AMG.
Story first published: Thursday, December 17, 2015, 20:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X