மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பெட்ரோனாஸ் 2015 வேர்ல்டு சாம்பியன் எடிஷன் கார் அறிமுகம்

Written By:

மெர்சிடிஸ் நிறுவனம், தங்களின் எஃப் 1 வெற்றியை கொண்டாடும் விதமாக, ஒரு ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளனர்.

மெர்சிடிஸ் நிறுவனம், சமீபத்தில் நடந்த எஃப்1 டிரைவர்ஸ் அண்ட் கன்ஸ்டிரக்டர்ஸ் சேம்பியன்ஷிப்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்றனர். இந்த ஃபார்முலா ஒன் போட்டி வெற்றியை கொண்டாடும் விதமாக, ஏ45 ஏஎம்ஜி 4மேட்டிக் கார் வகையில், 'மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பெட்ரோனாஸ் 2015 வேர்ட் சேம்பியன் எடிஷன்' என்ற பெயரில் ஒரு ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த காரை குறித்த மேற்பட்ட தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புனைப்பெயர்;

புனைப்பெயர்;

இந்த, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பெட்ரோனாஸ் 2015 வேர்ட் சேம்பியன் எடிஷன் காரை ‘ஏ சில்வர் ஏர்ரோ ஃபார் எவரிடே' என்று செல்லமாக அழைக்கின்றனர்.

இந்த ஸ்பெஷல் எடிஷன் கார், சில்வர் மற்றும் பெட்ரோல் நிறங்களில் ஆன லிவரிகள் கொண்டுள்ளது. மேலும், பெரிய ஃப்ரண்ட் ஸ்பிளிட்டர் மற்றும் பின்பக்கத்தில், பெரிய ரூஃப் (மேற்கூரை) ஸ்பாய்ளர் கொண்டுள்ளது.

பெயிண்ட் தேர்வுகள்;

பெயிண்ட் தேர்வுகள்;

பெயிண்ட் தேர்வுகளை பொருத்த வரை, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பெட்ரோனாஸ் 2015 வேர்ட் சேம்பியன் எடிஷன் கார், மூன்றே மூன்று விதமான கிரே நிறங்களில் மட்டுமே கிடைக்கின்றது.

இதன் 19-இஞ்ச் கிராஸ்-ஸ்போக் அல்லாய் வீல்கள், வீல்களின் நிறத்துடன் ஒன்றி அமைந்துள்ளது. மேலும், இந்த வீல்களின் மத்தியில், கிரீன் (பச்சை) நிறம் ஈர்க்கும் வகையில் சேர்க்கபட்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பெட்ரோனாஸ் 2015 வேர்ட் சேம்பியன் எடிஷன் காரின் இண்டீரியரில், வெள்ளை மற்றும் கிரீன் வண்ணங்களில் ஆன ஸ்ட்ரைப்களில் ஆன, லெதர் மற்றும் ஃபேப்ரிக் ஸ்போர்ட்ஸ் சீட்கள் உள்ளன.

மேலும், ஏர்கான் வெண்ட்ஸ், டேஷ்போர்ட் மற்றும் ஸ்டீயரிங் வீல்களில் மீது டாப் ஸ்டிட்ச்சிங் (மேல் தையல்) உள்ளிட்டவற்றில் கிரீன் (பச்சை) நிறம் அடையாளம் காணக்கூடிய வகையில் அழகாக சேர்க்கபட்டுள்ளது.

கியர்பாக்ஸை அடுத்து, இந்த கார், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பெட்ரோனாஸ் 2015 வேர்ட் சேம்பியன் எடிஷன் கார் என தெளிவாக தெரியும் வகையில் குறிப்பிடபட்டுள்ளது.

திறன்;

திறன்;

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பெட்ரோனாஸ் 2015 வேர்ட் சேம்பியன் எடிஷன் காரின் பவர் மற்றும் டிரைவ்ட்ரெய்ன் பொருத்தவரை, எந்த விதமான மாற்றங்களும் இல்லாமல், ஏ45 ஏஎம்ஜி 4மேட்டிக் வாகன இஞ்ஜினின் அதே தன்மைகளை கொண்டிருக்கும்.

விலை;

விலை;

இந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பெட்ரோனாஸ் 2015 வேர்ட் சேம்பியன் எடிஷன் கார், வரும் ஜனவரி 2016 முதல் மே 2016 வரையிலான காலத்திற்கு மட்டுமே விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பெட்ரோனாஸ் 2015 வேர்ட் சேம்பியன் எடிஷன் கார் ஜெர்மனியில், 65,402 யூரோக்கள் (சுமார் 46,10,700 ரூபாய்) என்ற விலையில் விற்கப்பட உள்ளது.

English summary
Mercedes Celebrates their F1 Win in F1 drivers and constructors championship, with the introduction of Special Edition A45 AMG car. This new Special Edition Car is named as Mercedes-AMG Petronas 2015 World Champion Edition car.
Story first published: Tuesday, December 1, 2015, 16:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark