மெர்சிடிஸ் பென்ஸ் இ400 கேப்ரியோலே காரின் முக்கிய சிறப்பம்சங்கள்
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஸ் காருடன் சேர்த்து இ-400 கேப்ரியோலே மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இ-கிளாஸ் காரின் கேப்ரியோலே மாடலாக வந்திருக்கும் இந்த காரில் மடக்கி விரிக்கும் வசதிகொண்ட எலக்ட்ரிக் சாஃப்ட் டாப் கூரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2 டோர் மாடலில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். இந்த காரின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வசதிகள்
- 7 இஞ்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- 14 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம்
- சேட்டிலைட் நேவிகேஷன்
- பார்க்கிங் பேக்கேஜ்
- 360 டிகிரி கேமரா
- ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட்
- 9 ஏர்பேக்குகள்
- ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
- பிரேக் அசிஸ்ட்
- ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்
- அட்டென்ஷன் அசிஸ்ட்

எஞ்சின்
இந்த காரில் 333 எச்பி பவரையும், 480என்எம் டார்க்கையும் வழங்கும் 3.0 லிட்டர் வி6 ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

பாதுகாப்பு வசதிகள்

விலை விபரம்
மெர்சிடிஸ் பென்ஸ் இ400 கேப்ரியோலே மாடல் ரூ.78.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








