செப்.25ல் விற்பனைக்கு வருகிறது மெர்சிடிஸ் மேபக் எஸ்600 ஆடம்பர கார்!
உலகின் மிகவும் ஆடம்பரமான கார் மாடல்களில் ஒன்றான மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது.
வரும் 25ந் தேதி இந்த புதிய கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுவரை வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் சொகுசு அம்சங்களை இன்னும் ஒருபடி மேலே கொண்டு செல்லும் விதத்தில் இந்த புதிய மாடல் இருக்கும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

லிமோசின் ரக மாடல்
உலகின் சிறந்த சொகுசு கார் மாடலான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் கூடுதல் நீளம் கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், எஸ் க்ளாஸ் காரைவிட 200மிமீ கூடுதல் வீல் பேஸ் கொண்ட கார் மாடல் என்பதால், லிமோசின் கார் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்
இந்த ஆடம்பர காரில் 533 எச்பி பவரையும், 830 என்எம் டார்க்கையும் வழங்கும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. இந்த காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

இன்டிரியர்
தாரளமான இடவசதி, ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகள், உயர்தரமான இன்டிரியர் பாகங்கள், சொகுசான இருக்கைகள் என ஆடம்பர கார்களுக்கு உரிய அனைத்து பண்புகளையும் இந்த கார் கொண்டுள்ளது. பொழுதுபோக்கு வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது.

பாதுகாப்பு வசதிகள்
மோதல்களை தவிர்க்கும் தொழில்நுட்பம், ரியர் சீட் பெல்ட் ஏர்பேக்ஸ், 9 ஏர்பேக்குகள் போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும்.

நிசப்தமான கேபின்
இதுவரை தயாரிக்கப்பட்ட மாடல்களில் கேபின் சப்தம் மிக குறைவான மாடலாக இதனை மெர்சிடிஸ் பென்ஸ் குறிப்பிடுகிறது. பின்புறத்தில் பயணிகளுக்கு தனித்தனி இருக்கைகள் இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை
ரூ.1.50 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








