3 புதிய பென்ஸ் சொகுசு கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

By Saravana

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பிராண்டில் 3 புதிய கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் முதல் இடத்தை இலக்காக கொண்டு வீறு நடை போட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது வர்த்தகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. புதிய மாடல்கள் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 மாடல்கள் விபரம்

மாடல்கள் விபரம்

தற்போது விற்பனையில் இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் சொகுசு காரின் கூபே பாடி ஸ்டைல் கொண்ட கார் மற்றும் எஸ் கிளாஸ் காரின் எஸ்63 ஏஎம்ஜி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவியின் க்ரேஸி கலர் எடிசன் என்ற பெயரில் ஒரு பிரத்யேக வண்ணத்திலான சொகுசு எஸ்யூவியும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

எஸ் கிளாஸ் கூபே மாடலின் எஞ்சன் விபரம்

எஸ் கிளாஸ் கூபே மாடலின் எஞ்சன் விபரம்

எஸ் கிளாஸ் செடான் மாடலில் இருக்கும் அதே எஞ்சின்தான் கூபே மாடலிலும் உள்ளது. இந்த எஞ்சின் 453 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வழங்கும் 4.7 லிட்டர் இரட்டை டர்போசார்ஜர் கொண்ட எஞ்சின் வி8 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த கார் 7ஜி - ட்ரானிக் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

எஸ் 63 ஏஎம்ஜி மாடலின் எஞ்சின் விபரம்

எஸ் 63 ஏஎம்ஜி மாடலின் எஞ்சின் விபரம்

எஸ் கிளாஸ் காரின் அதிக சக்திவாய்ந்த எஸ்63 ஏஎம்ஜி மாடலில் 577 பிஎச்பி சக்தியையும், 900 என்எம் டார்க்கையும் வாரி வழங்கக்கூடிய 5.5 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த காரில் 7 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடுஷிஃப்ட் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் மனித ஆற்றலில் முழுவதும் கைகளாலேயே ஒருங்கிணைக்கப்படுகிறது.

எஸ் 63 ஏஎம்ஜி செயல்திறன்

எஸ் 63 ஏஎம்ஜி செயல்திறன்

இந்த கார் ரியர் வீல் டிரைவ் மற்றும் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனில் கிடைக்கிறது. ரியர் வீல் டிரைவ் மாடல் 0 -100 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டிவிடும். ஆல் வீல் டிரைவ் மாடல் 3.9 வினாடிகளில் அந்த இலக்கை எட்டிவிடும் வல்லமை பொருந்தியது. மணிக்கு 250 கிமீ வரை அதிகபட்ச வேகம் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

எஸ்500 கூபே காரும், எஸ்63 ஏஎம்ஜி மாடலும் டிசைனில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆனால், எஸ்63 ஏஎம்ஜி காரில் ஏஎம்ஜி பாடி கிட்டும், கார்பன் ஃபைபர் இன்டிரியர் ஃபினிஷிங் செய்யப்பட்டிருப்பதால், சற்று மிரட்டலாக இருக்கிறது. அதேநேரத்தில், எஸ்500 கூபே கார் சாதுவாக தெரிகிறது.

வசதிகள்

வசதிகள்

எஸ்500 கூபே மற்றும் எஸ்63 ஏஎம்ஜி கார்களில் சாலை நிலைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே மாறிக் கொள்ளும் அடாப்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டம் மிக முக்கியமானதாக குறிப்பிடலாம். இந்த கார்களில் 94 விலையுயர்ந்த சுவரோஸ்கி கற்கள் பதிக்கப்பட்ட ஹெட்லைட்டுகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. விண்ட் ஸ்கிரீனில் தகவல்களை அளிக்கும் ஹெட் அப் டிஸ்ப்ளே, ஏஎம்ஜி லைட் வெயிட் அலாய் வீல்கள், ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் ஸ்டீயரங் வீல் போன்றவை மிக முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

ஜி63 ஏஎம்ஜி ஸ்பெஷல் எடிசன்

ஜி63 ஏஎம்ஜி ஸ்பெஷல் எடிசன்

நம் நாட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கிறது. ஆனால், புதிய வண்ணங்களில் வந்துள்ளது. இதனை க்ரேஸி கலர் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். இப்போது 5 விதமான புதிய வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

விலை விபரம்

விலை விபரம்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்500 கூபே: ரூ.2 கோடி

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்63 ஏஎம்ஜி: ரூ.2.60 கோடி

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி: ரூ.2.17 கோடி

[அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்]

More from DriveSpark

Article Published On: Saturday, August 1, 2015, 11:02 [IST]
English summary
The Mercedes-Benz S500 coupe and the S63 AMG Coupe have been launched in India. Mercedes-Benz has adopted the philosophy of ‘Live The Best' and are offering international products in Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+