இந்தியாவில் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் வருகை தள்ளிப்போகிறது!
இந்தியாவில் புதிய தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் வருகை தள்ளிப் போகிறது.
சமீபத்தில் புதிய தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

வடிவமைப்பிலும் முற்றிலும் புதிதாக மாறியிருக்கும் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வரும் 2017ம் ஆண்டில்தான் இந்த புதிய தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு, சென்னையிலுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் இந்த புதிய மாடல் அசெம்பிள் செய்யப்படும். இதன்மூலம், போட்டியாளர்களுக்கு நெருக்கடியான விலையில் அறிமுகம் செய்யபப்படும் வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தாலும், போதிய சர்வீஸ் நெட்வொர்க் இல்லாததன் காரணமாக, விற்பனை டல்லடித்து வருகிறது.
டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகிய புதிய மாடல்களுடன் இந்த புதிய தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி போட்டியிடும். அதற்கு முன்னதாக, மிட்சுபிஷி நிறுவனம் தனது டீலர் கட்டமைப்பை வலுப்படுத்திக் கொண்டால், இந்த எஸ்யூவியின் விற்பனை சிறப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








