யூரோ-5 மாசு விதியால் டீசல் கார் விலை ஒரு லட்சம் வரை உயரும்!

By Saravana

யூரோ- 5 மாசு விதி அமலுக்கு வந்தால், டீசல் கார் விலை ஒரு லட்ச ரூபாய் வரை அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இருந்து எட்டு ஆண்டுகளுக்குள் யூரோ-5 மற்றும் யூரோ- 6 மாசு விதியை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

Maruti Car

இதனால், கார்களின் மாசு அளவு வெகுவாக குறைக்க வேண்டிய நிலை கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும். இதற்காக, டீசல் கார்களில் டிபிஎஃப் எனப்படும் விசேஷ ஃபில்டர் மற்றும் இதர மாறுதல்களை செய்வதற்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

இதன் காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் டீசல் கார் விலை ரூ.65,000 முதல் ரூ.1 லட்சம் வரை அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, எஸ்யூவி வகை கார்கள் மற்றும் சிறிய டீசல் கார்கள்தான் இந்த புதிய விதிமுறைகளால் விலை வெகுவாக உயரும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

அதேநேரத்தில், யூரோ-5 மாசு விதிகளுக்கு மாறும்போது, பெட்ரோல் கார்களின் விலை ரூ.7,000 முதல் அதிகபட்சம் ரூ.11,000 வரை மட்டுமே கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
As India moves to Euro 5 and Euro 6 emission norms in the next two to eight years, the compact diesel car and SUV could well become the biggest casualty.
Story first published: Saturday, October 3, 2015, 9:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X