கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய செவர்லே கேப்டிவா அறிமுகம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய செவர்லே கேப்டிவா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
MY 2015 செவர்லே கேப்டிவா என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில் வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களும், பல கூடுதல் வசதிகளுடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புற மாற்றங்கள்
கம்பீரத்தை கூட்டும் வகையிலான புதிய வீல் ஆர்ச்சுகள் எல்இடி டெயில் லைட்டுகள், க்ரோம் பூச்சு முனையுடன் புகைப் போக்கி குழாய்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின்
புதிய கேப்டிவா எஸ்யூவியில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 186.5பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

கியர்பாக்ஸ்
மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கூடிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

வசதிகள்
க்ரூஸ் கன்ட்ரோல், வெப்பப்படுத்தும் வசதியுடன் மூன்றாவது வரிசை இருக்கை, காற்று சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய ஏசி, எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், மழை வந்தால் தானியங்கி முறையில் இயங்கும் வைப்பர்கள், சன் ரூஃப், டியூவல் ஸோன் ஏசி, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்கள்.

பாதுகாப்பு வசதிகள்
புதிய கேப்டிவா எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், 4 சேனல் ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கிறது.

விலை
கேப்டிவா மேனுவல்- ரூ. 25,13,528
கேப்டிவா ஆட்டோமேட்டிக்- ரூ. 27,36,192


Click it and Unblock the Notifications








