புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

By Saravana

வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மாடலில் 31 வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. புதிய மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள், முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

முகப்பில் புதிய குரோம் க்ரில் அமைப்பு, கருப்பு நிற பின்னணி கொண்ட புதிய ஹெட்லைட் ஹவுசிங், L வடிவிலான பனி விளக்குகள், S வடிவத்திலான எல்இடி பகல்நேர விளக்குகள் புதியவை. பின்புறத்திலும் லேசான டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பின்புற கதவில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரிலும் அதிக மாற்றங்கள் இல்லை. ஆனால், டேஷ்போர்டு டிசைனில் சிறிய மாற்றங்களை செய்து புதுப்பொலிவு கொடுத்துள்ளனர்.

 வசதிகள்

வசதிகள்

வசதிகள் நிறைந்த மாடலாகவே மஹிந்திரா எக்ஸ்யூவி 500 இருந்து வருகிறது. அந்த வகையில், இப்போது புதிதாக 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், அலுமினிய பூச்சு கொண்ட பெடல்கள், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய டிரைவர் இருக்கை, சன்ரூஃப், 17 இன்ச் அலாய் வீல்கள் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இதில், பெரும்பாலான வசதிகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

பழைய மாடலில் இருந்த அதே 2.2 லிட்டர் எம்- ஹாக் டீசல் எஞ்சின்தான் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனில் கிடைக்கும்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், லெதர் அப்ஹோல்ஸ்டரி, எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்புறத்தை பார்க்கக்கூடிய கண்ணாடிகள், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், வாய்ஸ் மெசெஜ் சிஸ்டம் போன்றவையும் முக்கிய வசதிகளாக இருக்கின்றன

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடலில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

 விலை விபரம்

விலை விபரம்

  • W4 - ரூ.11.21 லட்சம்
  • W6 - ரூ.12.48 லட்சம்
  • W8 - ரூ.14.18 லட்சம்
  • W8 AWD - ரூ.14.99 லட்சம்
  • W10 - ரூ.14.99 லட்சம்
  • W10 AWD - ரூ.15.99 லட்சம்


More from DriveSpark

Article Published On: Tuesday, May 26, 2015, 9:44 [IST]
English summary
Mahindra has launched the new age XUV 500 in India today. Mahindra had started promoting the vehicle well in advance, through a contest.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+