மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி க்யூ7 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

பொலிவு கூட்டபட்ட புதிய ஆடி க்யூ7 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் சொகுசு வாகன சந்தை தொடர் வளர்ச்சியை கண்டு வருகின்றது. இதனால், ஏராளமான இந்திய கார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு சொகுசு கார் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றனர்.

தற்போது, அறிமுகம் செய்யபட்டுள்ள பொலிவு கூட்டபட்ட புதிய ஆடி க்யூ7 கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி க்யூ7 காரின் தோற்றம்;

ஆடி க்யூ7 காரின் தோற்றம்;

பொலிவு கூட்டபட்ட புதிய 2017 ஆடி க்யூ7 காரின் தோற்றம், முந்தைய தலைமுறை க்யூ7 மாடல் காரோடு ஒப்பிடுகையில் சிறியதாக உள்ளது.

இந்த புதிய க்யூ7 எஸ்யூவி, இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் குறிப்பிடதக்க மேம்பாடுகளை பெற்றுள்ளது.

எடை;

எடை;

புதிய 2017 ஆடி க்யூ7, பழைய க்யூ7 காரை விட 300 கிலோ எடை குறைவாக உள்ளது.

விற்கபட உள்ள விதம்;

விற்கபட உள்ள விதம்;

புதிய 2017 ஆடி க்யூ7 ஃபேஸ்லிஃப்ட், ஆரம்ப கட்டத்தில் சிபியூ எனப்படும் முழுவதுமாக உற்பத்தி செய்து முடிக்கபட்ட யூனிட் என்ற வகையில் தான் விற்கபட உள்ளது.

2016-ஆம் ஆண்டு மத்தியின் முதல், இதை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான திட்டம் உள்ளதாக தெரிகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய 2017 ஆடி க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் மாடல், 3.0 லிட்டர், டர்போ சார்ஜ்ட், வி6 டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 249 பிஹெச்பி-யை-யும், 600 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த காரில் உள்ள 8-ஸ்பீட் டிப்டிரானிக் கியர்பாக்ஸ், ஆடி-யின் குவாட்ரோ டெக்னாலஜி மூலம் 4 சக்கரத்தில் பவரை டெலிவரி செய்கின்றது.

திறன்;

திறன்;

புதிய 2017 ஆடி க்யூ7 காரில் உள்ள டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமிட்டர் வரையிலான தூரத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

புதிய 2017 ஆடி க்யூ7 காரின் இந்த திறன், முந்தைய தலைமுறை மாடலை காட்டிலும், வேகம் அதிகமாக கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

புதிய 2017 ஆடி க்யூ7 கார், போஸ் ஆடியோ சிஸ்டம் கூடிய புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எல்ஈடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட், எலெகட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் லெதர் சீட்கள் (எலக்ட்ரிகல் முறையில் அட்ஜட் செய்யகூடிய லெதர் இருக்கைகள்), பேனோரமிக் சன் ரூஃப் உள்ளிட்ட அம்சங்களை

கொண்டுள்ளது.

மேலும், 4 ஃஜோன் கிலைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

புதிய வசதிகள்;

புதிய வசதிகள்;

புதிய 2017 ஆடி க்யூ7 காரில், ஹெச்யூடி எனப்படும் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே மற்றும் நேவிகேஷன் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

2017 ஆடி க்யூ7 காரில், ஏபிஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஈஎஸ்சி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மேலும், 2017 ஆடி க்யூ7 காரில் உள்ள அட்டென்ஷன் அசிஸ்ட், கொல்லிஷன் அவாய்டன்ஸ் சிஸ்டம் (மோதல்களை தவிர்க்கும் தொழில்நுட்பம்), நைட் விஷன் அசிஸ்ட் (இரவில் பார்க்க உதவி செய்யும் வசதி) உள்ளிட்ட பிரத்யேகமான அம்சங்கள், காரை இரவில் இயக்குவதை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

பொலிவு கூட்டபட்ட புதிய 2017 ஆடி க்யூ7, பிஎம்டபுள்யூ எக்ஸ்5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்-கிளாஸ் மற்றும் வால்வோ எக்ஸ்ஸி90 உள்ளிட்ட காரகளிடம் இருந்து போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

புதிய 2017 ஆடி க்யூ7 காரின் விலை விவரங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்;

ஆடி க்யூ7 பிரிமியம் பிளஸ் - 72 லட்சம் ரூபாய்

ஆடி க்யூ7 டெக்னாலஜி - 77.5 லட்சம் ரூபாய்.

குறிப்பு; இந்த விலை விவரங்கள் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் என்பது குறிப்பிடதக்கது.

செய்திகள் உடனுக்குடன்…

செய்திகள் உடனுக்குடன்…

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

Most Read Articles
English summary
Audi has launched their new Q7 facelift in India. This 2017 Audi Q7 SUV is to be sold as Completely Built Unit (CBU) initially and may be manufactured later in India, sometime around mid-2016. The new 2017 Audi Q7 is comparitively smaller when compared to the previous generation Q7 model.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X