இந்த மாதம் ரிலீசாகும் புதிய கார், பைக் மாடல்கள் - ஒரு பார்வை

Written By:

பண்டிகை காலத்தின் துவக்கமாக ஆகஸ்ட் மாதத்தை குறிப்பிடலாம். ஆகஸ்ட் முதல் கார் மற்றும் பைக் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டுவது வழக்கம்.

அந்த விதத்தில், இந்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் புதிய கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம். ஒவ்வொரு மாடல்களின் விபரங்களையும் தலா இரண்டு ஸ்லைடுகளில் வழங்கியிருக்கிறோம்.

01. ஃபியட் அபார்த் காம்படிஷன் 595

01. ஃபியட் அபார்த் காம்படிஷன் 595

நீண்ட தாமதத்திற்கு பின்னர் கார் ஃபியட் நிறுவனம் முதல் அபார்த் கார் மாடலை வரும் 4ந் தேதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. ஃபியட் அபார்த் காம்படிஷன் 595 மாடல்தான் அபார்த் பிராண்டில் வரும் முதல் மாடல். இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த புதிய மாடல், மினி பிராண்டு கார்களுக்கு போட்டியானதாக இருக்கும். அதிக சக்திவாய்ந்த மாடல் என்பதுடன், தனித்துவமான டிசைன் அமைப்பை கொண்டிருக்கும்.

 ஃபியட் அபார்த் 595 எஞ்சின்

ஃபியட் அபார்த் 595 எஞ்சின்

ஃபியட் அபார்த் 595 கார் 1.4 லிட்டர் மல்டிஏர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினுடன் விறே்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 158 பிஎச்பி பவரையும், 201 என்எம் டார்க்கையும் வழங்கும். நார்மன் மற்றும் ஸ்போர்ட்ஸ் என்ற இருவித செயல்திறன் கொண்டதாக எஞ்சினை மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கும். மேனுவல் ஓவர்ரைடு சிஸ்டம் கொண்ட ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்கு இடையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02. மாருதி எஸ் க்ராஸ்

02. மாருதி எஸ் க்ராஸ்

மாருதியிடமிருந்து வரும் புதிய க்ராஸ்ஓவர் மாடல். தற்போது விற்பனையில் இருக்கும் ரெனோ டஸ்ட்டர், சமீபத்தில் வந்த ஹூண்டாய் க்ரெட்டா போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக வருகிறது. மாருதியின் புதிய நெக்ஸா என்ற பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருக்கும் முதல் மாடல்.

 மாருதி எஸ் க்ராஸ் தொடர்ச்சி...

மாருதி எஸ் க்ராஸ் தொடர்ச்சி...

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியும் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் வருகிறது. இவை ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகின்றன. ஆரம்பத்தில் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வருகிறது. ரூ.7.5 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்கு இடையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03. ஃபோர்டு ஆஸ்பயர்

03. ஃபோர்டு ஆஸ்பயர்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய காம்பேக்ட் செடான் மாடல். ஃபோர்டு நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான மாடலாக பார்க்கப்படுகிறது. சிறப்பான டிசைன், இடவசதி, தொழில்நுட்பங்களுடன் வருவதால் வாடிக்கையாளர்களும் இந்த காரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஃபோர்டு ஆஸ்பயர் தொடர்ச்சி...

ஃபோர்டு ஆஸ்பயர் தொடர்ச்சி...

இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. அதிகபட்சமாக 87 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 110 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரை அளிக்கக்கூடிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வருகிறது. ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டு நிலையில், ரூ.5.30 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து ரூ.9 லட்சம் வரையிலான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

04. ஹோண்டா சிபிஆர்650எஃப் பைக்

04. ஹோண்டா சிபிஆர்650எஃப் பைக்

வரும் 4ந் தேதி சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, கோல்கட்டா, இந்தூர், ஆமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் Revfest என்ற நிகழ்ச்சிக்கு ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக்குடன் சேர்த்து, மேலும் 2 புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அவை சிபிஆர்300ஆர் என்ற ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட பாடி ஸ்டைல் கொண்டதாகவும், மற்றொன்று சிபி300 நேக்டு பாடி ஸ்டைல் மாடல்களாக இருக்கும் என்பது யூகமாக உள்ளது. வரும் 4ந் தேதி சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ கல்லூரியில் ஹோண்டா ரெவ்ஃபெஸ்ட் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

ஹோண்டா சிபிஆர்650எஃப் எஞ்சின்

ஹோண்டா சிபிஆர்650எஃப் எஞ்சின்

ஹோண்டா சிபிஆர்650எஃப் பைக்கில் 85.77 எச்பி பவரையும், 63 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 649சிசி 4 சிலிண்டர் எஞ்சின் இருக்கும். லிக்யூடு கூல்டு எஞ்சின் கொண்ட இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. ரூ.8 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்...

தொடர்புடைய செய்திகள்...

01. புதிய ஃபோர்டு ஆஸ்பயர் டெஸ்ட் டிரைவ்...

02. மாருதி எஸ் க்ராஸ் கார்விபத்து படங்கள்...

 
English summary
New Car and Bike Launches in August 2015.
Story first published: Saturday, August 1, 2015, 13:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark