டெல்லியில், 2,000சிசி.,க்கும் மேலான டீசல் கார்களுக்கு தடை: சரியான தீர்வாகுமா?

By Saravana

டெல்லியில், காற்றில் மாசு அளவை குறைக்கும் நடவடிக்கையாக வரும் ஜனவரி 1ந் தேதி முதல் மார்ச் 31ந் தேதி வரை 2,000சிசி.,க்கு மேலான ரகத்தை சேர்ந்த டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை பதிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு கார் நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், 2,000சிசி.,க்கும் அதிகமான டீசல் கார்களுக்கு தடை விதித்திருப்பது மட்டுமே சரியான தீர்வு இல்லை என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

டெல்லியில் கார் விற்பனை

டெல்லியில் கார் விற்பனை

நம் நாட்டில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில், டெல்லியில் பங்கு 7 சதவீதம் மட்டுமே. அதாவது, 2,10,000 புதிய கார்கள் மட்டுமே அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதில், டீசல் கார்கள் எவ்வளவு தெரியுமா?

டீசல் கார்களின் பங்கு

டீசல் கார்களின் பங்கு

டெல்லியில், மொத்த கார் விற்பனையுடன் ஒப்பிடுகையில், டீசல் கார்களின் பங்கு வெறும் 25 சதவீதமாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஆண்டுக்கு 52,500 டீசல் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த கணக்கீட்டில் டெல்லியில் 1.75 சதவீத டீசல் கார்கள் மட்டுமே டெல்லியில் விற்பனை செய்யப்படுகின்றன.

வடிகட்டினால்...

வடிகட்டினால்...

அதிலும், வடிகட்டினால் 2,000சிசி.,க்கும் அதிகமான டீசல் எஞ்சின் கார்களின் விற்பனை மிக குறைவாகவே இருக்கும். எனவே, இந்த தடையால் உடனடி பயன் ஏதும் ஏற்பட்டு விடாது என்று வாகன தயாரிப்பு துறையினர் புள்ளிவிபரங்களை அடுக்குகின்றனர். அதுமட்டுமா...

குளறுபடி...

குளறுபடி...

2,000சிசி.,க்கும் மேலான ரக டீசல் எஞ்சின் கார்கள் மிகவும் உயரிய தொழில்நுட்பத்தில் வருவதுடன், பாரத் ஸ்டேஜ்-4 மாசு அம்சங்களுடன் வருகின்றன. ஆனால், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கார்கள்தான் அதிக அளவில் விற்பனையாவதுடன், அடிப்படையான தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கின்றன.

வாடகை கார்கள்

வாடகை கார்கள்

2,000சிசி.,க்கும் மேலான கார்களை ஒப்பிடுகையில், அதற்கு கீழ் சிசி., திறன் கொண்ட டீசல் எஞ்சின் கார்கள் அதிகப்படியான புகையை வெளியிடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. டாக்சி மார்க்கெட்டிலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, தடை விதித்திருந்தால், அந்த கார்களுக்குத்தான் முதலில் விதித்திருக்க வேண்டும். அதேநேரத்தில், அந்த கார்களை சிஎன்ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதற்கு உச்சநீதிமன்றம் வரும் மார்ச் 31ந் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.

டூ வீலர்தான் அதிகம்

டூ வீலர்தான் அதிகம்

டெல்லியில், தினசரி 1,500 கார்கள் பதிவு செய்யப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் வெளியானது. ஆனால், அது தவறானது. அனைத்து ரகங்களிலும் பதிவு செய்யபப்படும் வாகனங்களின் எண்ணிக்கையே அது. இந்த 1,500 வாகனங்களில் 61 சதவீதம் இருசக்கர வாகனங்கள். எனவே, 1,500 கார்கள் என்பது தவறானது.

தடை விதிக்க முடியுமா?

தடை விதிக்க முடியுமா?

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், டெல்லியில் பிற வாகனங்களை காட்டிலும் டூ வீலர்களால் வெளியிடப்படும் நச்சுப் புகையின் அளவு மிக அதிகம் என்று தெரிய வந்திருக்கிறது. எனவே, டூ வீலர்களுக்கு தடை விதிக்க முடியுமா என்ற குரலும் எழுந்துள்ளது.

பாரஜ் ஸ்டேஜ்-4 கார்கள்

பாரஜ் ஸ்டேஜ்-4 கார்கள்

இந்த தடை விஷயத்தில் பாரத் ஸ்டேஜ்-4 மாசு அம்சம் கொண்ட கார்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் கார் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளன.

உடனடி தீர்வு

உடனடி தீர்வு

உடனடி தீர்வாக 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனைத்து ரக வாகனங்களுக்கும் தடை விதிப்பது ஓரளவு பலனை தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோன்று, பாரத் ஸ்டேஜ்-4 மாசு அம்சம் கொண்ட வாகனங்களை மட்டுமே சாலையில் இயக்குவதற்கு அனுமதிப்பதன் மூலமாக, ஓரளவு நல்ல தீர்வாக அமையும். .

பென்ஸுக்கு அதிக பாதிப்பு

பென்ஸுக்கு அதிக பாதிப்பு

இந்த தடையின் காரணமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கும் ரகத்தில் அதிக கார்களை வைத்திருக்கும் நிறுவனமும் மெர்சிடிஸ் பென்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்படும் பென்ஸ் கார்கள்

பாதிக்கப்படும் பென்ஸ் கார்கள்

  • ஏ க்ளாஸ்- 200சிடிஐ
  • பி க்ளாஸ்- 200சிடிஐ
  • சி க்ளாஸ்-200சிடிஐ
  • சிஎல்ஏ க்ளாஸ்- 200சிடிஐ
  • சிஎல்எஸ் க்ளாஸ்- 200சிடிஐ
  • ஜிஎல் க்ளாஸ்- 350சிடிஐ
  • ஜிஎல்ஏ க்ளாஸ்- 200சிடிஐ
  • ஜிஎல்இ க்ளாஸ்- 250சிடிஐ
  • ஜிஎல்இ க்ளாஸ்- 350சிடிஐ
  • எஸ் க்ளாஸ்- 350சிடிஐ
  • பிஎம்டபிள்யூ கார்கள்

    பிஎம்டபிள்யூ கார்கள்

    5 சீரிஸ்- 530டீ எம் ஸ்போர்ட்

    6 சீரிஸ் - 640டீ

    7 சீரிஸ் - 730டீ எல்டி ப்ரஸ்டீஜ்

    எக்ஸ்3- எக்ஸ்ட்ரைவ்30டீ

    எக்ஸ்5- எக்ஸ்ட்ரைவ்30டீ

    எக்ஸ்6- எக்ஸ்ட்ரைவ்40 டீ எம் ஸ்போர்ட்

     ஆடி கார்கள்

    ஆடி கார்கள்

    ஆடி ஏ8 50 டிடிஐ, 60 டிடிஐ

    ஆடி க்யூ-5 45 டிடிஐ

    ஆடி க்யூ-7 45 டிடிஐ

    டாடா கார்கள்

    டாடா கார்கள்

    ஆரியா

    மோவஸ்

    சஃபாரி

    சஃபாரி ஸ்ட்ராம்

    சுமோ கோல்டு

    ஸினான்

    மஹிந்திரா மாடல்கள்

    மஹிந்திரா மாடல்கள்

    பொலிரோ

    கெட்அவே

    சாங்யாங் ரெக்ஸ்டன்

    ஸ்கார்ப்பியோ

    தார்

    எக்ஸ்யூவி500

    ஸைலோ

     இதர கார்கள்

    இதர கார்கள்

    ஹூண்டாய் சான்டா ஃபீ

    செவர்லே கேப்டிவா

    செவர்லே ட்ரெயில்பிளேசர்

    ஃபோர்டு எண்டெவர்

    டொயோட்டா ஃபார்ச்சூனர்

    டொயோட்டா இன்னோவா

    டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எல்சி200

    டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ

    மாருதி எஸ்கேப்

    மாருதி எஸ்கேப்

    இந்த தடை உத்தரவிலிருந்து சிறிதும் பாதிப்பு இல்லாமல் தப்பியிருக்கிறது மாருதி கார் நிறுவனம். அந்த நிறுவனத்தின் பல கார் மாடல்கள், பெட்ரோல் மாடலிலும், 2,000சிசி.,க்கும் குறைவான டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுவதால், எஸ்கேப் ஆகியிருக்கிறது.

    முதலீடுகள் குறையும்

    முதலீடுகள் குறையும்

    இந்த தடை உத்தரவு பல கார் நிறுவனங்களின் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் முதலீடுகளை குறைப்பதோடு, வேலை இழப்பையும் உருவாக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

    எதிர்மறை தாக்கம்

    எதிர்மறை தாக்கம்

    டெல்லியில் விதிக்கப்பட்டிருக்கும் தடையை உத்தரவை தொடர்ந்து, நாட்டின் பிற நகரங்களிலும் இதேபோன்ற தடை உத்தரவு வரும் என்ற அச்சத்தால், வாடிக்கையாளர்கள் டீசல் கார் வாங்குவதை தவிர்க்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், டீசல் கார் மார்க்கெட்டில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

    டீசல் கார் விற்பனைக்கு அவகாசம்

    டீசல் கார் விற்பனைக்கு அவகாசம்

    இதனிடையே, வரும் 31ந் தேதி வரை இருப்பு உள்ள டீசல் கார்களை பதிவு செய்வதற்கு, உச்ச நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருக்கிறது. இதனால், கார் ஷோரூம்களில் இருப்பு உள்ள டீசல் கார்களை விற்பனை செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    இது மட்டும் போதாது...

    இது மட்டும் போதாது...

    டெல்லியில், காசு மாசுபடுவதை குறைப்பதற்கு, வாகனங்களுக்கு தடை விதிப்பது மட்டும் தீர்வாகாது. டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்கள், ஆலைகளிலிருந்து வெளியேறும் புகை, குப்பை கூளங்களால் அதிகரித்து வரும் காற்று மாசு, குப்பைகளை எரிக்கும் மாநகராட்சியின் நடவடிக்கை, டெல்லியை சுற்றியுள்ள வயல்வெளிகளில் எரிக்கப்படும் கூளங்கள், போக்குவரத்தை குறைக்கும் நடவடிக்கை என்று பல விஷயங்களை ஆராய்ந்து அதற்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று சியாம் அமைப்பு தெரிவித்துள்ளது.

Most Read Articles
Story first published: Thursday, December 17, 2015, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X