புதிய ஃபியட் காரின் டீசர் வெளியீடு... அடுத்த தலைமுறை லீனியா என பரபரப்பு

By Saravana

புதிய செடான் காரின் டீசரை ஃபியட் கார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மிக நேர்த்தியான பின்புற அமைப்புடன் காணப்படும் அந்த புதிய செடான் கார் அடுத்த தலைமுறை லீனியா காராக இருக்குமென ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் பரபரக்கின்றன.

வரும் 21ந் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடைபெற இருக்கும் மோட்டார் ஷோவில் இந்த புதிய செடான் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் ஸ்டைல் சென்டரும், துருக்கியை சேர்ந்த அதன் கூட்டணி நிறுவனமான டோஃபாஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் இணைந்து இந்த புதிய செடான் காரை உருவாக்கியுள்ளன.

Fiat Linea Teaser

ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தை சேர்ந்த 40 நாடுகளில் பெயரிடப்படாத இந்த புதிய செடான் கார் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை.

ஆனால், இதுதான் புதிய தலைமுறை லீனியாவாக கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச வாகன கண்காட்சியில் புதிய ஃபியட் லீனியா காட்சிக்கு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 9, 2015, 11:08 [IST]
English summary
According to reports, Fiat will be unveiling the new generation Linea on the 21st of May at the Istanbul Motor Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+