செப்.23ல் விற்பனைக்கு வருகிறது புதிய ஃபோர்டு பிகோ கார்!

By Saravana

வரும் 23ந் தேதி புதிய ஃபோர்டு ஃபிகோ கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. முந்தைய மாடலின் வெற்றியை தக்க வைக்கும் விதத்தில், நவீன தொழில்நுட்பம் மற்றும் டிசைன் மாற்றங்களுடன் புதிய ஃபிகோ கார் வருகிறது.

கடந்த ஜூலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்த ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் கார் விற்பனையில் நல்ல பங்களிப்பை கொடுக்க துவங்கியிருக்கும் நிலையில், அதனை வலுப்படுத்தும் விதத்தில் புதிய ஃபோர்டு ஃபிகோ காரும், அடுத்த வாரம் விற்பனைக்கு வர இருக்கிறது.

டிசைன்

டிசைன்

ஏற்கனவே மார்க்கெட்டுக்கு வந்துவிட்ட ஆஸ்பயர் செடான் காரின் ஹேட்ச்பேக் மாடல்தான் என்பதால், பூட்ரூமை தவிர்த்து ஒட்டுமொத்த டிசைனில் அதிக மாறுதல்கள் இருக்காது. அதேநேரத்தில், இரு கார்களையும் வித்தியாசப்படுத்துவதற்கான சில டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்டிரியர்

இன்டிரியர்

ஆஸ்பயர் காரின் இன்டிரியரை அப்படியே இந்த புதிய தலைமுறை ஃபிகோ காரும் பங்கிட்டுக் கொள்ளும். முழுவதும் கருப்பு நிற இன்டிரியருடன் வருகிறது. அதேநேரத்தில், ஸ்டீயரிங் வீல், டோர் ஆர்ம் ரெஸ்ட்டுகள் மற்றும் சென்டர் கன்சோலில் க்ரோம் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்த புதிய மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். பழைய 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் விடைபெறுகிறது. பெட்ரோல், டீசல் என இண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற பல பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.4.30 லட்சம் ஆரம்ப விலையில் புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 16, 2015, 7:38 [IST]
English summary
Here is some good news for those hardcore Ford Figo fans: The new, next generation Figo hatchback will be launched on the 23rd of September in India!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+