கோபக்கார கூட்டத்தின் தாக்குதலில் சின்னபின்னமான புதிய ஹூண்டாய் க்ரெட்டா!

Posted By:

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலான க்ரெட்டா விற்பனைக்கு வந்து இரு தினங்கள்தான் ஆகிறது. இந்தநிலையில், வாட்ஸ்அப்பிலும், சமூக வலைதளங்களிலும் புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இரண்டு விபத்துக்களில் சிக்கியதாக வெளியான தகவல்களும், புகைப்படங்களும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தநிலையில், இது விபத்து இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதாவது, சாலையில் க்ரெட்டா டிரைவருக்கும், மற்றொருவருக்கும் ஏற்பட்ட மோதலில் இந்த கார் கூட்டத்தினரால் அடித்து நொறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு விபத்துக்கள்?

இரண்டு விபத்துக்கள்?

டெலிவிரி துவங்குவதற்கு முன்னரே இரண்டு விபத்துக்களில் ஹூண்டாய் க்ரெட்டா சிக்கி விட்டதாக தகவல் வெளியானது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், பாதுகாப்பு வசதிகள் நிறைந்ததாக வந்திருக்கும் இந்த கார் இரண்டு விபத்துக்களில் சிக்கியதாக கேள்விப்பட்டதும் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

வாடிக்கையாளர் பீதி

வாடிக்கையாளர் பீதி

ஹூண்டாய் க்ரெட்டா காரை முன்பதிவு செய்து வைத்திருந்தவர்களும், பீதியில் ஆழ்ந்தனர்.

ஆறுதல் செய்தி

ஆறுதல் செய்தி

எங்கு நடந்தது என்பது கூட சரியாக தெரியாமல், இந்த செய்தி அவசரமாக பல இணையதளங்களில் பகிரப்பட்டது. க்ரெட்டாவின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அலசப்பட்டது. ஆனால், அது விபத்து இல்லை என்று இப்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகராறு

தகராறு

சாலையில் சென்றவர் மீது சம்பந்தப்பட்ட க்ரெட்டா கார் மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து. ஆத்திரமடைந்த கிராமத்தார் அந்த காரை அடித்து நொறுக்கியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த காரை ஓட்டிச் சென்றவர் பெண் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே சம்பவம்

ஒரே சம்பவம்

இரண்டு விபத்துக்கள் என்று கூறப்பட்டதையும் ஹூண்டாய் மோட்டார்ஸ் மறுத்திருக்கிறது. இதனை ஒரே சம்பவமாகவும் குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்திருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி உறுதியான தகவல்களை எமது சமூக வலைதள பக்கங்களில் விரைவில் அப்டேட் செய்கிறோம்.

 

Photo Source: Facebook

English summary
New Hyundai Creta SUV Smashed By Mob.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark