டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் படங்கள்!

Posted By:

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில், டாடா ஹெக்ஸா எஸ்யூவி கான்செப்ட் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

டாடா ஆரியா எம்பிவி காரில் மாற்றங்களை செய்து எஸ்யூவி வகை மாடலாக மேம்படுத்தியிருப்பதாக தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், டாடா ஹெக்ஸா எஸ்யூவி கான்செப்ட் மாடல் தற்போது தயாரிப்பு நிலையை நெருங்கியுள்ளது. அந்த மாடலின், சில படங்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன.

வடிவம்

வடிவம்

டாடா ஹெக்ஸா எஸ்யூவி 4,764மிமீ நீளமும், 1,895மிமீ அகலமும், 1,780மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவி 2,850மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால், உள்புறத்தில் மிக மிக சிறப்பான இடவசதியை கொண்டிருக்கும் என்று நம்பலாம்.

முகப்பு

முகப்பு

பானட், ஹெட்லைட், முகப்பு க்ரில், பம்பர் ஆகியவை மறு வடிவமைப்பு பெற்றிருக்கிறது. புதிய பனி விளக்குகள் அறை, ஏர்டேம் ஆகியவை புதிய டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் முகப்பை கவர்ச்சியாக்கியிருக்கிறது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் பெரிய வீல் ஆர்ச்சுகள், 19 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை எஸ்யூவி தோற்றத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது. ஆனாலும், அந்த ஆரியா சாயல் இருப்பதுதான் நெருடல்.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் மிகச்சிறப்பான வசீகரித்தை கொடுக்கிறது. அத்துடன், பம்பரும், இரட்டை புகைப்போக்கி குழாய்களும் எஸ்யூவி.,யாக மாற்றிக் காட்டியிருப்பது சிறப்பு. ரூஃப் ஸ்பாய்லரும் இதன் தோற்றத்திற்கு வலு சேர்க்கிறது. மொத்தத்தில் ஓர் சிறப்பான தோற்றத்தை கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய டாடா ஹெக்ஸா எஸ்யூவியில் 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

கடந்த மார்ச் மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் 6 சீட்டர் மாடலாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிலை மாடல் 7 சீட்டர் அல்லது 8 சீட்டர் மாடலில் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Photo Source: RPMx1000

English summary
New Images Of Tata Hexa SUV Surface Online.
Please Wait while comments are loading...

Latest Photos