இந்தியா வரும் புதிய ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி பிராங்க்ஃபர்ட்டில் அறிமுகம் - விபரம்!
பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் ஜாகுவார் நிறுவனத்தின் புதிய எஃப் பேஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
மிக அசத்தலான டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அடிப்படை
ஜாகுவார் சி-எக்ஸ் 17 உருமாதிரியின் அடிப்படையில், இந்த புதிய எஃப் பேஸ் எஸ்யூவி தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவி நிலை நிறுத்தப்பட இருக்கும் செக்மென்ட்டில் மிகவும் ஸ்டைலான மாடலாக இருக்கும் என்பதில் ஐயமில்லாத அளவுக்கு ஒவ்வொரு அங்கமும் மிக நேர்த்தியாக இருக்கிறது.

கட்டுமானம்
ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் எக்ஸ்எஃப் கார்கள் கட்டமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவியும் இலகு எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி 1,665 கிலோ எடை கொண்டது. 4,371மிமீ நீளம் கொண்ட இந்த எஸ்யூவியில் 2,874மிமீ வீல் பேஸ் இருப்பதால், கேபினில் மிகச்சிறப்பான இடவசதியை வழங்கும். இந்த எஸ்யூவியில் 650 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் உள்ளது.

டீசல் மாடல்
இந்த புதிய ஜாகுவார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போடீசல் எஞ்சின் இருக்கும். அதிகபட்சமாக இந்த எஞ்சின் 180 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வருகிறது. ரியர் வீல் டிரைவ் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், ஆல் வீல் டிரைவ் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர, 300 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் ஆல் வீல் டிரைவ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

பெட்ரோல் மாடல்
பெட்ரோல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் எஞ்சின் 340 பிஎச்பி மற்றும் 380 பிஎச்பி பவர் கொண்ட மாடல்களில் கிடைக்கும். ஆல் வீல் டிரைவ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

இன்டிரியர்
சிறப்பான ஹெட் ரூம், லெக் ரூம் கொண்ட இந்த எஸ்யூவியில் சொகுசுக்கும், தொழில்நுட்ப வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது. பொழுதுபோக்கு தேவையை நிறைவு செய்வதற்கு 10.2 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இருக்கிறது. 12.3 இன்ச் டிஜிட்டல் மீட்டர் கன்சோல் இடம்பெற்றிருக்கிறது.

உற்பத்தி
இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் நிறுவனத்தின் சோலிஹல் ஆலையில் ஜாகுவார் எக்ஸ்இ செடான் காருடன் சேர்த்து இந்த புதிய எஸ்யூவியும் உற்பத்தி செய்யப்படும். பியூர், பிரஸ்டீஜ், போர்போலியோ, ஆர் - ஸ்போர்ட், எஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர, அறிமுகத்தை கொண்டாடும் வகையில், ஃபர்ஸ்ட் எடிசன் மாடலும் வர இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விலை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








