புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்களில் 1.5லி டீசல் எஞ்சின் - புதிய தகவல்கள்

By Saravana

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு புதிய மாடல்களும் பல்வேறு தொழில்நுட்ப சிறப்பம்சங்களை கொண்டதாக வர இருக்கிறது.

மேலும், முத்தாய்ப்பாக, 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருப்பது ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் YSD என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகின்றன. இந்த கார்களும் இலகு எடை கொண்ட புதிய உடல்கூடு கொண்டதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

தற்போது ஸ்விஃப்ட், டிசையர் கார்களில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையையும் வெகுவாக பெற்றிருக்கிறது. இந்தநிலையில், புதிய தலைமுறை ஸ்விஃப்ட், டிசையர் கார்களில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது.

புதிய டீசல் எஞ்சின்

புதிய டீசல் எஞ்சின்

புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்களில் பொருத்தப்பட இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை சுஸுகி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த எஞ்சின் E15A என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இதன்மூலம், பியட் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு வழங்கப்படும் ராயல்டி தொகையை தவிர்க்கும் வாய்ப்பு மாருதிக்கு கிட்டும்.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

புதிய டீசல் எஞ்சின் மட்டுமின்றி, சமீபத்தில் வந்த சியாஸ் காரில் இருக்கும் அதே ஸ்மார்ட் ஹைபிரிட் வெகிக்கிள் தொழில்நுட்பத்தை புதிய ஸ்விஃப்ட், டிசையர் கார்களின் டீசல் மாடலில் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இந்த இரண்டு புதிய மாடல்களின் மைலேஜ் லிட்டருக்கு 30 கிமீ என்ற அளவில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உற்பத்தி

உற்பத்தி

குஜராத்தில் அமைக்கப்பட்டு வரும் சுஸுகி நிறுவனத்தின் நேரடி ஆலையில், இந்த இரண்டு புதிய மாடல்களும் உற்பத்தி செய்யப்படும். அதேநேரத்தில், ஹரியானா ஆலைகளிலும் இந்த இரு கார்களின் தயாரிப்பு தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் 2017ல் அறிமுகம் செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
According to reports, the Maruti Swift and Dzire cars to get a Suzuki-developed 1.5-litre diesel engine (codenamed E15A).
Story first published: Wednesday, September 9, 2015, 12:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X