ரெனோ நிறுவனத்தின் புதிய டஸ்டர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபடும்
ரெனோ நிறுவனம், தங்களின் புதிய டஸ்டர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ளது.
2016-ல் ஆட்டோ எக்ஸ்போவில், பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிபடுத்த உள்ளன. இதில், ரெனோ நிறுவனமும் தங்கள் தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகின்றது.

டிசைன்;
இந்த புதிய டஸ்டர் காரின், ஒட்டு மொத்த டிசைன் விஷயத்தில் எந்த விதமான மாற்றங்களும் செய்யபட போவதில்லை.
ரெனோ கார் வடிவமைப்பாளர்கள், பல்வேறு உபகரணங்களுக்கு நவீனமான தோற்றம் வழங்க உள்ளனர்.

எக்ஸ்டீரியர்;
புதிய ரெனோ டஸ்டர் காரின் எக்ஸ்டீரியர் (வெளிப்புற அம்சங்கள்) பொறுத்த வரை, புதிய ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், ஃப்ரண்ட் கிரில், பம்பர்கள், அல்லாய் வீல்கள், டெய்ல் லைட்கள் மற்றும் புதிய கலர் தேர்வுகளுடன் கிடைக்க உள்ளது.

இண்டீரியர்;
இண்டீரியர் (உட்புற தோற்றம்) பொறுத்த வரை, பல்வேறு அம்சங்கள் மறுவடிவமைக்கப்பட உள்ளது.
இந்த மறுவடிவமைப்புகள், நவீன மற்றும் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என தெரிகின்றது.

இஞ்ஜின்;
இஞ்ஜின் தேர்வுகளை பொறுத்த வரை, ரெனோ நிறுவனம் தற்போது கிடைக்கும் அனைத்து பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் கொண்ட டஸ்டர்களை தொடர்ந்து வழங்க உள்ளது.
ரெனோடின் 1.5 லிட்டர் இஞ்ஜின், ஆர்-ஏஎம்டியுடன் இணைக்கபட்டு வழங்கபட உள்ளது.
தற்போதைய நிலையில், ரெனோ நிறுவன தயாரிப்பு ஏஎம்டி மற்றும் ட்யூவல்-கிளட்ச் என இரண்டு டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் வருகின்றது. எனினும், ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வர உள்ள புதிய டஸ்டர் காருக்கு மக்களிடம் இருந்து அதிகமான வரவேற்பு இருக்கலாம் என தெரிகின்றது.

போட்டி கார்கள்;
ரெனோ நிறுவனம் சார்பாக வழங்கப்படும் டஸ்டர், ஹூண்டாய் கிரெட்டா, நிஸ்ஸான் டெர்ரானோ மற்றும் விரைவில் அறிமுகம் செய்யடட உள்ள மாருதி சுஸுகி விட்டாரா உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட வேண்டிய நிலை இருக்கும் என தெரிகின்றது.

சர்வதேச சந்தைகளில் வெளியீடு;
சர்வதேச சந்தைகளில் விற்கபடும் டஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவியில், சில எக்ஸ்டீரியர் அம்சங்களில் மட்டும் மாற்றங்கள் செய்யபட்டு மேம்படுத்தபட்டுள்ளது.

இந்திய சந்தைகளில் வெளியீடு;
புதிய ரெனோ டஸ்டர் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட உள்ளது.
மேம்படுத்தபட்ட இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி, மார்ச் 2016 முதல் இந்திய வாகன சந்தைகளில் கிடைக்க உள்ளது.

ரெனோடின் நோக்கம்;
காம்பேக்ட் எஸ்யூவி செக்மண்டில், ரெனோ நிறுவனம் நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகின்றது.
இந்த முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள, ரெனோ நிறுவனம் நோக்கம் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








