ரோல்ஸ்ராய்ஸ் முதல் எஸ்யூவி பற்றி உங்களுக்காக சில விஷயங்கள்!!

Written By:

ஆடம்பர கார் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் முதல்முறையாக எஸ்யூவி வகை வாகனம் ஒன்றை தயாரித்து வருகிறது.

அனைத்து சாலைகளுக்கும் ஏற்ற உயர்வகை கார் மாடலாக ரோல்ஸ்ராய்ஸ் இந்த புதிய மாடலை குறிப்பிடுகிறது. கல்லினன் என்ற பெயரில் தற்போது அழைக்கப்படும் இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் எஸ்யூவி மாடல் பற்றி கிடைத்த தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூ.,வின் புதிய 7 சீரிஸ் காரின் பிளாட்ஃபார்மில் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்படுகிறது. மேலும், பிஎம்டபிள்யூவின் ரியர் வீல் டிரைவ் மற்றும் எக்ஸ்- டிரைவ் சிஸ்டம் போன்ற தொழில்நுட்ப வசதிகளும் இந்த புதிய எஸ்யூவியில் பயன்படுத்தப்பட உள்ளது.

'மேஜிக் கார்பெட் ரைடு'!

'மேஜிக் கார்பெட் ரைடு'!

'மாயஜால கம்பள பயணம்' என்ற ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் போன்றே இந்த எஸ்யூவியும் மிகச்சிறப்பான பயண அனுபவத்தை வழங்குவதாக இருக்கும். அதாவது, எந்தவொரு சாலையில் சென்றாலும், பிற ரோல்ஸ்ராய்ஸ் கார்களை போன்றே மிக சொகுசான பயணத்தை வழங்கும் என்று ரோல்ய்ராய்ஸ் பெருமிதமாக கூறுகிறது.

 சஸ்பென்ஷன் சிஸ்டம்

சஸ்பென்ஷன் சிஸ்டம்

முதல்கட்டமாக புதிய ரோல்ஸ்ராய்ஸ் எஸ்யூவியின் சஸ்பென்ஷன் அமைப்பின் சோதித்து பார்க்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, அனைத்து சாலை நிலைகளிலும் இந்த எஸ்யூவியின் சஸ்பென்ஷன் எந்தளவு திருப்திகரமாக இருக்கிறது என்பதை சோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்யவும், 2018ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ரோல்ஸ்ராய்ஸ் திட்டமிட்டிருக்கிறது.

 
English summary
Rolls Royce, the premium luxury car manufacturer will use the BMW 7 Series platform for their upcoming super luxurious SUV, named the Cullinan (at least for now).
Story first published: Monday, June 22, 2015, 11:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark