பிப்.17ல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா!
வரும் 17ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா கார்.
ஏற்கனவே இருந்த மாடலில் சில மாற்றங்களை செய்து புதுப்பொலிவுடன் களமிறக்குகிறது ஃபோக்ஸ்வேகன்.
புதிய கிரில் அமைப்பு, புதிய பம்பர் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆடி ஏ4 காரில் இருப்பது போன்ற அதே டிசைன் ஒற்றுமை கொண்ட டெயில் லைட் மற்றும் புதிய அலாய் வீல் செட்டுடன் வருகிறது புதிய ஜெட்டா.

புதிய போலோ மற்றும் வென்ட்டோ கார்களில் கொடுக்கப்பட்டதுபோன்ற அடிப்பாகம் தட்டையான ஸ்டீயரிங் வீல் இருக்கிறது. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் புதிய மாடலில் குறிப்பிடத்தக்க அம்சம். புதிய அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட சிறிது கூடுதலான விலையில் இந்த புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஃபோக்ஸ்வேகன்.
புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் சென்னை ஆன்ரோடு விலை
புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் சென்னை ஆன்ரோடு விலை
(குறிப்பு: அனைத்து வேரியண்ட்டுகளின் ஆன்ரோடு விலையை ஸ்லைடரை க்ளிக் செய்து காணலாம்)


Click it and Unblock the Notifications








