லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தரும் ஸ்விஃப்ட், டிசையர் கார்கள்!!

மைலேஜில் குறை வைக்காத கார்கள் என பெயரெடுத்திருக்கின்றன மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள். இந்த நிலையில், இந்த கார்களின் மைலேஜை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாருதி திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக, ஹைபிரிட் சிஸ்டத்தில் இயங்கும் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு, அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம், மைலேஜில் எந்தவொரு கார் நிறுவனமும் எளிதில் நெருங்க முடியாத இடத்திற்கு மாருதி கார்கள் செல்லும் என்று கருதப்படுகிறது.

ஹைபிரிட் சிஸ்டம்

ஹைபிரிட் சிஸ்டம்

Smart Hybrid Vehicle Technology By Suzuki [SHVS] என்று அழைக்கப்படும் இந்த புதிய இரட்டை எரிபொருள் நுட்பத்தை மாருதி நிறுவனம் தனது கார்களில் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில்தான் முதல்முறையாக, இந்த ஹைபிரிட் நுட்பத்தை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி அறிமுகம் செய்தது.

 தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் ஆற்றலையும், சக்கரம் சுழலும்போது ஏற்படும் இயக்க ஆற்றலையும், மின் ஆற்றலாக மாற்றும் இன்டகிரேடட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம், லித்தியம் அயான் பேட்டரியில் சேமிக்கப்படும். இந்த மின்சாரத்தின் மூலமாக தேவைப்படும்போது, மின் மோட்டார் இயக்கப்படும். இதனால், மைலேஜ் அதிகரிக்கும்.

ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம்

ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம்

மின் ஆற்றல் உற்பத்தி மட்டுமின்றி, எரிபொருள் விரயத்தை தவிர்ப்பதற்காக, ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கும். சிக்னல்களில் நிற்கும்போது விரயமாகும் எரிபொருளை வெகுவாக தவிர்க்க இந்த தொழில்நுட்பம் உதவும்.

முதலில் சியாஸ்...

முதலில் சியாஸ்...

இந்த ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட முதல் கார் மாடலாக மாருதி சியாஸ் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், இந்த ஹைபிரிட் சிஸ்டம் டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கும். சியாஸ் காருக்கு அடுத்ததாக, மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் இந்த ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக வர இருக்கிறது.

புதிய ஸ்விஃப்ட், டிசையர்

புதிய ஸ்விஃப்ட், டிசையர்

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் இந்த புதிய ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஹைபிரிட் சிஸ்டம் பொருத்தப்படும்போது, ஸ்விஃப்ட், டிசையர் கார்களின் டீசல் மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 30 கிமீ.,க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைவான ஹைபிரிட் சிஸ்டம்

விலை குறைவான ஹைபிரிட் சிஸ்டம்

ஹைபிரிட் கார்களின் விலை அதிகமாக இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், மாருதி கார்களில் பயன்படுத்தப்பட இருக்கும் ஹைபிரிட் சிஸ்டத்திற்காக ரூ.13,000 வரை மட்டுமே கூடுதல் விலை நிர்ணயிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வாடிக்கையாளர்களுக்கு அதிக பட்ஜெட் சுமையை கொடுக்காது. இதன் காரணமாக பெரும் வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது.

ஆனால்...

ஆனால்...

மாருதி சியாஸ் மற்றும் மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் கார்களில் இந்த ஹைபிரிட் சிஸ்டம் உடனடியாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் 2017ம் ஆண்டில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்றுமுன் கிடைத்த தகவல்

சற்றுமுன் கிடைத்த தகவல்

அடுத்த தலைமுறை சுஸுகி ஸ்விஃப்ட் கார் வரும் அக்டோபரில் நடக்க இருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, August 24, 2015, 9:53 [IST]
English summary
According to reports, the 2015 Maruti Ertiga facelift will be the next car to get SHVS technology. The company has plans to install this system in all cars that are powered by the 1.3-litre DDiS diesel engine including the Swift and Dzire.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+