டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை: அதிகம் பாதிக்கப்பட்ட கார் மாடல்கள்!

Written By:

டெல்லியில், காற்று மாசுபடுதலை குறைப்பதற்காக புதிய டீசல் கார்களை பதிவு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தடை விதித்துள்ளது. நாட்டிலேயே அதிக கார்கள் விற்பனையாகும் பகுதிகளில் ஒன்றான தலைநகர் டெல்லியில் பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு கார் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ரூ.1,000 கோடி மதிப்பிலான டீசல் கார்கள் டீலர்களில் தேக்கமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், டீசல் மாடல்களை அதிகம் கைவசம் வைத்திருக்கும் மஹிந்திரா நிறுவனத்துக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சமீபத்தில் விற்பனைக்கு வந்த சில புதிய மாடல்களும் இந்த தடையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அதிகம் பாதிக்கப்பட்ட கார் மாடல்களில் சிலவற்றின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. மாருதி எஸ் க்ராஸ்

01. மாருதி எஸ் க்ராஸ்

மாருதி எஸ் க்ராஸ் கார் டீசல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு மாருதி எஸ் க்ராஸ் கார் கூட டெல்லியில் விற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, ஹூண்டாய் க்ரெட்டாவால் கடும் நெருக்கடியை சந்தித்து வந்த மாருதி எஸ் க்ராஸ் காருக்கு தற்போது இந்த தடை பெரும் நெருக்கடியை தந்துள்ளது. மேலும், உடனடியாக பெட்ரோல் மாடலையும் அறிமுகம் செய்ய முடியாத நிலை இருப்பதால், மாருதி எஸ் க்ராஸ் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

02. ஹூண்டாய் க்ரெட்டா

02. ஹூண்டாய் க்ரெட்டா

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் -10 கார்களில் ஒன்றாக மாறிவிட்ட ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், டெல்லியில் டீசல் மாடலுக்கு போடப்பட்டிருக்கும் தடை இந்த காரை முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெட்ரோல் மாடலில் விற்பனை செய்யப்பட்டாலும், க்ரெட்டாவின் டீசல் மாடலுக்குத்தான் அதிக முன்பதிவுகள் கிடைத்தன. இந்தநிலையில், டெல்லியில் இருக்கும் தடை காரணமாக, அங்கு க்ரெட்டா விற்பனை வெகுவாக பாதிக்கப்படும்.

03. ரெனோ டஸ்ட்டர்

03. ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் விற்பனை ஏற்கனவே போட்டியாளர்களால் குறுகிவிட்ட நிலையில், இந்த தடையும் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், ரெனோ டஸ்ட்டர் விற்பனை எண்ணிக்கை மேலும் சரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

 04. டொயோட்டா இன்னோவா

04. டொயோட்டா இன்னோவா

நாட்டின் அதிகம் விரும்பப்படும் எம்பிவி ரக கார் டொயோட்டா இன்னோவா. இந்த காரும் தற்போது டீசல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால், டெல்லியில் டொயோட்டா இன்னோவா விற்பனை அடியோடு முடங்கியிருக்கிறது. இதனால், கார் நிறுவனங்களுக்கும், டீலர்களுக்கும் பலத்த அடி விழுந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களும் நல்ல சேதி வராதா என்று ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

05. மஹிந்திரா டியூவி300

05. மஹிந்திரா டியூவி300

டெல்லியில் டீசல் கார்களுக்கு போடப்பட்ட தடையால் அதிகம் பாதிக்ப்பட்ட நிறுவனம் மஹிந்திரா. டீசல் மாடல்களை அதிகம் விற்பனை செய்து வரும் நிறுவனமான மஹிந்திராவுக்கு இந்த தடை வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மஹிந்திராவின் லேட்டஸ்ட் வரவான டியூவி300 எஸ்யூவியின் விற்பனையும் அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது.

06. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

06. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

நாட்டின் அதிகம் விரும்பப்படும் எஸ்யூவி மாடல்களில் ஒன்றான மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் விற்பனையும் டெல்லியில் இருக்கும் தடையால் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. டீசல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

07. மஹிந்திரா எக்ஸ்யூவி500

07. மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விற்பனையும் டெல்லியில் முடங்கியிருக்கிறது. டெல்லி போன்ற போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் எளிதாக ஓட்டுவதற்கான ஆட்டோமேட்டிக் மாடலிலும் சமீபத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், திடீர் தடை உத்தரவு விற்பனையை அடியொடு முடக்கியிருக்கிறது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

டீசல் கார் தயாரிப்புக்காக பெரும் முதலீடுகளை செய்திருக்கும் கார் நிறுவனங்களுக்கும், உதிரிபாக சப்ளையர்களுக்கும் இந்த தடை உத்தரவு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டீலர்களிலும் விற்பனை சரிந்ததால், டீலர் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மறுபுறம் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களும் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்துக்கிடக்கின்றனர்.

அரசுகளுக்கு நோட்டீஸ்

அரசுகளுக்கு நோட்டீஸ்

டெல்லியில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் டீசல் கார்களின் பதிவுக்கு தடை விதித்திருப்பது குறித்தும், அதில் மாறுதல்கள் செய்ய வேண்டுமா என்று கேட்டும், மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும், இதுதொடர்பாக, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

 
English summary
NGT Diesel Vehicle ban In Delhi: Most impacted Car Models.
Story first published: Tuesday, December 15, 2015, 17:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark