டெல்லியில் நுழைய டிரக்குகளுக்கு கூடுதல் வரி: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

Posted By:

டெல்லியில் நுழையும் டிரக்குகள் இனி சுற்றுச்சூழல் வரி கட்ட வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த சுற்றுச்சூழல் வரியானது சுங்க வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி தான் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்தப்படியாக சீனாவின் தலைநகரான பெய்ஜிங் உள்ளது.

Truck
  

நீண்ட காலமாக டெல்லியில் மாசு கட்டுப்பாட்டை தடுக்கவோ அல்லது குறைக்கவோ எந்த விதமான முயற்சிகளும் மேற்க்கொள்ளப்படாமல் இருந்தது. தற்போது தான், இதற்கான, ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக எடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் சுற்றுச்சூழல் வரி வசூலிப்பதும் ஒன்றாக திகழ உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் குழுவின் உத்தரவுப்படி, வணிக வாகனங்கள் கீழ்காணும் முறையில் சுற்றுச்சூழல் வரிகளை செலுத்த வேண்டும்.

இலகு ரக டிரக்குகள் மற்றும் கனரக டிரக்குகள் என வகைக்கு ஏற்ப ரூ.700 முதல் ரூ.1,300 வரை வசூலிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

டெல்லியை சேரும் இடமாக கொள்ளாமல் பயணிக்கும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 71 ஏ மற்றும் தேசிய நெடுஞ்சாலை 71 வழியாக திசை மாற்றி அனுப்பபடும். மேலும், டெல்லியை சேரும் இடமாக கொள்ளாமலும், மாற்று வழிகளை ஏற்றுக்கொள்ளாமல் செல்லும் வாகனங்கள் டெல்லியின் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டாது.

இது போன்ற வாகனங்கள் மாற்று வழியை ஏற்று செல்ல கட்டாயமாக பானிப்பட் என்ற இடத்திற்கு திருப்பி அனுப்பபடும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. சோதனைச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுற்றுச்சூழல் வரியானது, டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டிக்கு என பிரத்யேகமாக இயங்கும் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.

இப்படியாக, வசூலிக்கப்படும் சுற்றுச்சூழல் வரி மூலம் டெல்லியின் சுற்றுச்சூழலையும், காற்றின் தரத்தையும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட உள்ளது.

அதிக சுமை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் மிகுந்த எடையிலான வாகனங்களின் மூலம் ஏற்படும் மாசு வெளிப்பாடுகளின் அளவுகளை ஆராயும் வகையிலான ஏற்பாடுகளுடன் தயாராக இருக்க வேண்டும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டிக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியுள்ளது.

English summary
The National Green Tribunal (NGT) wants trucks to pay environmental taxes to enter Delhi. These charges will be in addition to the toll charges.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark