இந்தியாவில் மைக்ரா, சன்னி கார்களை திரும்ப அழைக்கும் நிசான்!
குறைபபாடுடைய உதிரிபாகங்களை மாற்றித் தருவதற்காக, இந்தியாவில் 12,000 மைக்ரா, சன்னி கார்களை திரும்ப அழைக்க இருக்கிறது நிசான் நிறுவனம்.
மைக்ரா மற்றும் சன்னி கார்களின் எஞ்சின் சுவிட்சில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதேபோன்று, இரு கார்களின் ஏர்பேக்கிலும் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை தயாரிக்கப்பட்ட மைக்ரா, சன்னி கார்களை திரும்ப அழைக்க நிசான் இந்தியா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
நிசான் இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வழியாக இந்த பிரச்னைகள் இலவசமாக சரிசெய்து தரப்படும். இதேபிரச்னைக்காக உலக அளவில் 2.70 லட்சம் மைக்ரா, சன்னி கார்களை நிசான் திரும்ப அழைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








