எலக்ட்ரிக் காராக அவதாரம் எடுத்த நிசான் எவாலியா... ஏக டிமான்ட்டாம்...!!

By Saravana

இங்கிலாந்தில், பேட்டரியில் இயங்கும் மின்சார எவாலியா காரை நிசான் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அங்கு எவாலியா கார் என்வி200 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 7 சீட்டர் செக்மென்ட்டில் முழுவதுமான மின்சார கார் மாடலாக இருப்பதால், இந்த காருக்கு ஏக டிமான்ட் இருப்பதாக நிசான் கணிப்பு தெரிவித்துள்ளது.

டாக்சி ஆபரேட்டர்களை குறிவைத்து களமிறக்கப்பட்டிருக்கும் இந்த காரின் அருமை, பெருமைகளை ஸ்லைடரில் காணலாம்.

விலை

விலை

இங்கிலாந்தில், 30,000 டாலர் மதிப்பில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது, பேட்டரியை லீசுக்கு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை நிசான் வழங்கியுள்ளது. மேலும், மூன்றாடுகளில் பெட்ரோல், டீசல் கார்களைவிட அதிக சேமிப்பு கொண்ட மாடலாக இது உரிமையாளருக்கு பயன் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

7 சீட்டர் எலக்ட்ரிக் கார்

7 சீட்டர் எலக்ட்ரிக் கார்

இந்த காரில் 7 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை அமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், ஃபுல் சைஸ் இருக்கைகளாக இருப்பதால், மிக சவுகரியமான பயணத்தை வழங்கும் மின்சார காராக குறிப்பிடுகின்றனர். எனவே, இந்த காருக்கு டாக்சி மார்க்கெட்டில் உரிமையாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெறும் என கருதப்படுகிறது.

குயிக் சார்ஜ் சிஸ்டம்

குயிக் சார்ஜ் சிஸ்டம்

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 170 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று நிசான் தெரிவிக்கிறது. மேலும், குயிக் சார்ஜ் ஆப்ஷன் மூலமாக அரை மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான பூட் ஸ்பேஸ்

சிறப்பான பூட் ஸ்பேஸ்

இந்த காரில் மூன்று வரிசைகளும் இருக்கும் நிலையில், 443 லிட்டர் பூட் ரூமை கொண்டிருக்கிறது. மேலும், கூரை வரையில் பொருட்களை வைக்கும்போது, இந்த கார் 870 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்குவதாகவும் நிசான் கூறுகிறது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகச்சிறந்ததாக இருக்கும்.

குடும்பத்தினருக்கும் ஏற்றது

குடும்பத்தினருக்கும் ஏற்றது

டாக்சி மார்க்கெட் மட்டுமின்றி, குடும்பத்தினர் பயன்படுத்துவதற்கும் ஏற்ற மாடலாக இது இருப்பதாகவும், இதனை தயங்காமல் வாங்கலாம் என்று அந்நாட்டு ஆட்டோமொபைல் ஊடகங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 9, 2015, 12:07 [IST]
English summary
The e-NV200 by Nissan has been launched in United Kingdom for 19,895 Pounds to 27,260 Pounds. This translates to INR 19,45,564 to INR 27,01,005 for Nissan e-NV200.
மேலும்... #நிசான் #nissan #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+