ஐரோப்பாவில் விற்பனையில் கலக்கும் நிசான் லீஃப்!
ஐரோப்பாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையை நிசான் லீஃப் கார் 4வது முறையாக பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் 14,658 நிசான் லீஃப் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டு விற்பனையை விட கடந்த ஆண்டு நிசான் லீஃப் காரின் விற்பனை 33 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் நிசான் லீஃப் காருக்கு முக்கிய மார்க்கெட்டாக இங்கிலாந்து உள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் 4,051 நிசான் லீஃப் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் 55 சதவீத பங்களிப்பையும் நிசான் லீஃப் கார் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார் மாடல் என்ற பெருமையை நிசான் லீஃப் பெற்றிருப்பது குறித்து அந்த நிறுவனம் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு லீஃப் காரின் உரிமையாளரும், அவரது நண்பருக்கு இந்த காரை பரிந்துரை செய்வதாகவும், வாடிக்கையாளர்களிடம் லீஃப் கார் மிகுந்த திருப்தியைும், சந்தோஷத்தையும் வழங்கி வருவதாகவும் நிசான் அதிகாரி கில்லம் கார்ட்டியர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








