வெள்ளத்தால் பாதிக்கபட்ட வாடிக்கையாளர்களுக்கு, உதவி கரம் நீட்டும் நிஸ்ஸான்!

Written By:

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட, தங்கள் நிறுவன கார் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்ய நிஸ்ஸான் நிறுவனம் முன்வந்துள்ளது.

சமீபத்தில், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டிருந்தது. இதில், ஆயிரகணக்கான கார்களும் பாதிக்கபட்டிருந்தது. இப்படி பாதிக்கபட்ட தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேக டோல்-ஃப்ரீ (இலவச) ஹெல்ப்லைன் (0124-6628111) எண் ஒன்று அமைக்கபட்டுள்ளது.

நிலைமை சீராகி வருவதையடுத்து, சென்னையில் அனைத்து நிஸ்ஸான் ஒர்க்‌ஷாப்களும் இயங்க துவங்கிவிட்டது. சென்னையில் உள்ள ஒவ்வொரு நிஸ்ஸான் ஒர்க்‌ஷாப்களிளும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களின் சர்வீஸ்களை கண்காணிக்க ஒரு பிரத்யேக மேனேஜர் இருப்பார்கள் என அறிவிக்கபட்டுள்ளது. இவர்கள், வெள்ளத்தால் பாதிக்கபட்ட கார்களுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்குவர்.

மேலும், நிஸ்ஸான் வழங்கும் இந்த சேவை குறித்து, 8000-திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை எஸ்எம்எஸ், சமூக வலைதளங்கள் மற்றும் ஈ-மெயில்கள் மூலமாக தொடர்பு கொண்டு நிஸ்ஸான் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. நிஸ்ஸான் ஒர்க்‌ஷாப்கள் மீண்டும் திறக்கபட்டுள்ளதாகவும், துரித சேவை வழங்க தயாராக உள்ளதாகவும் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள இன்சூரன்ஸ் கொள்கைகள் குறித்தும், எந்த எந்த சேவைகள் இன்சூரன்ஸ் திட்டங்களின் மூலம் பெற முடியும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கபடுகிறது.

Nissan offers supports to car owners affected by chennai floods

மேலும், சென்னையில் விரைவில் ஒரு சர்வீஸ் முகாம் நடத்த உள்ளதாக நிஸ்ஸான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முகாமின் போது, வெள்ளத்தால் பாதிக்கபட்ட வாகனங்களுக்கு முழு பரிசோதனை செய்யபடும் என்றும், ஜெனியுன் ஆக்ஸசரீஸ் மீது தள்ளுபடியும், சலுகைகள் வழங்கபடும் என அறிவிக்கபட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கபட்ட கார்களை சரி செய்து தருவதில், நிஸ்ஸான் நிறுவனம் நிஸ்ஸான் மிகுந்த அக்கரை கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில், வெள்ளத்தால் பாதிக்கபட்டு ஆங்காங்கே நிறுத்தி வைக்கபட்டுள்ள கார்களை சர்விஸ் செய்யும் நோக்கில், நிஸ்ஸான் டீலர்ஷிப்கள் மொபைல் வேன்களை இயக்கி சர்வீஸ் செய்து வருகின்றனர்.

மேலும், சென்னையில் பாதிக்கபட்ட வாகனங்களுக்கு துரித சர்வீஸ் வழங்கும் நோக்கில், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து உதிரி பாகங்களை சென்னைக்கு திசைமாற்றி கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

English summary
Nissan has come forward to offers support to it Vehicle Owners, who were affected By Chennai Floods. For this, even a special toll-free helpline (0124-6628111) has also been arranged. Nissan dealers in Chennai are operating mobile vans to provide service to the damaged vehicles.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark